உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி
வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு
மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த
அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வரும் அரசுத்
தேர்வுகளில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய
மந்திரி, தேர்வு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி.
கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடந்த காலங்களில் காப்பியடித்த சம்பவங்கள் நடைபெற்ற பள்ளிகளில் தேர்வு மையம் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறித்த
நேரத்திற்குள் பாடப்புத்தகங்களை வழங்காதது தொடர்பாக விசாரணை நடத்த
உத்தரவிட்ட அமைச்சர் அலி, சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது
உ.பி. அரசு உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகளில்
காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும்
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள்
உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர்
மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் அரசுத் தேர்வுகளில்
காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய மந்திரி,
தேர்வு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை
பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடந்த காலங்களில் காப்பியடித்த சம்பவங்கள் நடைபெற்ற பள்ளிகளில் தேர்வு மையம் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறித்த
நேரத்திற்குள் பாடப்புத்தகங்களை வழங்காதது தொடர்பாக விசாரணை நடத்த
உத்தரவிட்ட அமைச்சர் அலி, சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...