கல்வியியல் கல்லூரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்த கரூர் தான்தோன்றிமலை எம்.எஸ்.இ.எஸ்.,
கல்வியியல் கல்லூரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், கீழ் கோர்ட் போல சாட்சிகள்
விசாரணை நடக்கும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சேலம் ஓமலூர் சங்கர், மேட்டூர் கவிதா, வைத்தீஸ்வரி, தர்மபுரி பொன்னரசி, இடைப்பாடி சக்திவேல். இவர்கள், எம்.எஸ்.இ.எஸ்., கல்வியியல் கல்லூரியில் பி.எட்., படிப்பில் சேர்ந்தனர்.இவர்களிடமிருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புச் சான்றிதழ்களை நிர்வாகம் பெற்றது. சங்கர்உட்பட ஐந்து பேரும் 2011--12 ல் தேர்ச்சி பெற்றனர். கல்விச் சான்றிதழ்களை வழங்குமாறு, நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். நிர்வாகம் மறுத்ததை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். விசாரித்த தனி நீதிபதி,'கல்விச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்,' என 2013 அக்.,3 ல் உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால்,கல்லூரி தாளாளர் கிருஷ்ணமோகன், முதல்வர் சுதாவை கோர்ட் அவமதிப்பின் கீழ் தண்டிக்க கோரி, ஐந்து பேரும் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் மனு விசாரணைக்கு வந்தது.

சங்கர், கவிதா, சக்திவேல், வைத்தீஸ்வரியின் தந்தை சிவப்பிரகாஷ் மற்றும்
தாளாளர் கிருஷ்ணமோகன்,பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் ஆஜராகினர். நீதிபதி:
கோர்ட் உத்தரவிட்டும் சான்றிதழ்களை ஏன் வழங்கவில்லை?
தாளாளர்: சான்றிதழ்களை பசுபதிபாளையம் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
இன்ஸ்பெக்டர்: நாங்கள் எடுத்துச் செல்லவில்லை.
நீதிபதி உத்தரவு: அப்படியெனில், சான்றிதழ்கள் யாரிடம்தான் உள்ளன?
இவ்வழக்கில் கீழ் கோர்ட் போல,சாட்சிகள் அடிப்படையிலான விசாரணை
நடத்தினால்தான் உண்மை தெரியவரும்.நாளை( இன்று) விசாரணை நடக்கும்.
மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் ஆஜராக வேண்டும்.
மனுதாரர்கள் 4 பேர் நீண்டதூரத்திலிருந்து, அதிகம் செலவு செய்து
ஆஜராகியுள்ளனர். அவர்கள் மீண்டும் நீண்டதூரம் பயணம் செய்து, நாளை ஆஜராவதில்
சிரமம் ஏற்படும். இதைக் கருத்தில்கொண்டு மனுதாரர்கள் மதுரையில்
தங்குவதற்கான செலவிற்காக, தலா 2500 வீதம் 10 ஆயிரம் ரூபாயை தாளாளர் வழங்க
வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...