Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா?

      தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே இப்பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் தனிப்பிரிவாக கொண்டு வந்து நிர்வகித்து தரம் உயர்த்தப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


          தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 997 தொடக்கப்பள்ளிகளும், 63 நடுநிலைப்பள்ளிகளும், 133 உயர்நிலைப்பள்ளிகளும், 100 மேல்நிலைப்பள்ளிகளும், 1300-க்கும் மேற்பட்ட விடுதிகளும் இயங்கி வருகின்றனர்.  இவைகள் அனைத்தையும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர்கள் மேற்பார்வையிட்டு நடத்தி வருகின்றனர். மேற்கண்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் உள்ளதால்,  போதிய நேரம் இல்லாததால் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை ஆய்வு செய்து, நிர்வகிக்க இயலவில்லை. இதனால் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிதம்பரம் வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) அலுவலகத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர்கள், அலுவலக உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

             ஆதிதிராவிடநலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சோப், படுக்கை உள்ளிட்ட  பொருள்கள் வழங்கப்படாமலேயே பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.  மேலும் இத்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசு விதிப்படி உரிய இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால் போதுமான அளவில் மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத காரணத்தாலும், போதிய பணி இடங்கள் உருவாக்கப்படாத காரணத்தாலும் ஏறத்தாழ 25 ஆண்டுகள் வரை பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியராகவே பணியாற்றும் நிலை உள்ளது.
எனவே ஆதிதிராவிட நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து தனியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,  மாவட்டக்கல்வி அலுவலர், உதவிக்கல்வி அலுவவலர் ஆகியோரை மாவட்டம் தோறும் நியமிக்க வேண்டும். மாவட்டம் தோறும் அமைக்காவிட்டாலும், 8 மண்டலங்களாக பிரித்து மண்டல உதவி இயக்குநர் பதவியை உருவாக்கி கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




4 Comments:

  1. DEAR 82-89.........FRIENDS...Weitage systathil +2,DEGREE,B.ED, and TET intha naangum iruppathal, TET il mattum athiga marks edutthavargalukku munnurimai kodutthal naan +2 vil athiga marks eduthu ullen. athanaal +2 vil ennai vida kuraivana marks edutthavargal postig pettral naam yeen case poda koodathu..Naam yenna avvalau mutalgala..

    ReplyDelete
  2. Frds i got 6447 eng bc. Bt i lost my job by .88 Marks. Now too i don't know I'll get job in paper 1, My cut off is 70'15, So frds dont fight let t trb to do their work. Illana loss nammakku than. Those who are selected all t best. Please help tat poor children to get more knowledge. Those who r like me better change our goal n job. Or try one time ana intha vatti namma mark 110 Mela than irukkanum.

    ReplyDelete
  3. கல்வியில் ஒவ்வொரு நாளும் நவீனத்துவம் வளர்ந்தவன்னம் உள்ளன.அரசு ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகள் கொடுத்து ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை வளர்த்து வருகிறது.கல்வித்துறை அதிகாரிகளும் நவீன முறைக்கு ஈடாக பயிற்சி பெறுகிறார்கள்.ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் விடுதியையும்,பள்ளிகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் விடுதியில் பணியாற்றும் காப்பாளர்களை பள்ளி ஆசிரியர்களாகவும் ஆசிரியர்களை விடுதிகாப்பாளர்களாகவும் பணிமாற்றம் செய்யப்படுகிறார்கள்.ஆதலால் குறிப்பிட்ட கல்வியாண்டில் பணியிடைபயிற்சி பெற்ற ஆசிரியர்கள் விடுதிக்கு செல்வதால் பயிற்சியின் பலன் மாணவர்களுக்கு பயன்படாமல் பயிற்சியின் நோக்கமே பயனற்றுபோகிறது.அதே வேலையில் பணியிடை பயிற்சி பெறாத விடுதிகாப்பாளர்கள் பள்ளிக்கு செல்வதால் நவீன தொழில்நுட்பம் பற்றி அறியாத ஆசிரியர்களால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.ஆதலால் விடுதிகாப்பாளர்களை பள்ளிக்கும், பள்ளியாசிரியர்களை விடுதிக்கும் பணிமாறுதல் செய்யாமல் விடுதிகளை தனி இயக்குனர் கட்டுப்பாட்டிலும், பள்ளிகளை தனி இயக்குனர் கட்டுப்பாட்டிலும் கொண்டுவந்து நிர்வகித்தால் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் கல்வித்தரம் உயரும்.
    மேலும் கல்வித்துறையில் பணியாறும் அதிகாரிகள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்,மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,மவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ,இயக்குனர் போன்ற அனைத்து அதிகாரிகளும் கல்வியியல் பயிற்சி பெற்றவர்கள் கல்வி தொழில் நுட்பம் பெற்றவர்கள். அவர்கள் பள்ளிகளில் நடைமுறைபடுத்தப்படும் அனைத்து கல்விமுறைகளும் அறிந்தவர்கள்.ஆசிரியர்களும் எச்சரிக்கையோடு பணியாற்றுவார்கள்.கல்வியின் தரம் உயரும்.ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் தனி வட்டாச்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோர் வருவாய்த்துறை அலுவலர்கள்.இவர்கள் பணிக்கும் கல்விப்பணிக்கும் தொடர்பு இல்லாதது.இவர்கள் பள்ளிகளை ஆய்வுசெய்ய வேண்டுமானால் கல்வித்துறைபற்றிய நுட்பங்கள் அறிந்திருக்க வேண்டும்.இவர்களின் அடுத்த பதவி உயர்வு வருவாய்த்துறையில் தான். கல்வி தொழில் நுட்பங்கள் பற்றி அறியாத அதிகாரிகள் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை ஆய்வு செய்தால் நலத்துறைப்பள்ளிகளின் நிலை இன்னும் மோசமாகத்தான் செல்லும்.ஆதலால் ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளுக்கென்று அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் களுக்கு பதில் மாவட்ட கல்வி அலுவலர்(ஆதிதிராவிடர் நலம்) பதவியும் , ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனிவட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) க்கு பதில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்(ஆதிதிராவிடர் நலம்) என்ற புதிய பதவிகளை ஏற்படுத்தி ஏற்கனவே உள்ள மண்டல உதவி இயக்குனர்(ஆதிதிராவிடர் நலம்),துணை இயக்குனர் (ஆதிதிராவிடர் நலம்) இயக்குனர் (ஆதிதிராவிடர் நலம்) ஆகியோர் கட்டுப்பாட்டில் கொணர்ந்து கண்காணித்தால் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் கல்வித்தரம் உயரும்.இதை நடைமுறை படுத்துவதால் அரசுக்கு எந்த நிலையிலும் நிதிச்சுமை இல்லை.இதை பாடசாலை வாயிலாக அரசின் கவனத்திற்கு செல்லும் என்று நம்பிக்கையோடு குணா.9442890864.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive