உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது
கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய
மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சீமான் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மா.கணேசன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை போல தயாரித்து அவரது கையெழுத்தை போலியாக போட்டு தொங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பூபதி, சிந்தல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எ.ராஜேஸ்வரி ஆகியோருக்கு பணிமாறுதல் ஆணை வழங்கியுள்ளார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவியை தவறான வழியில் பயன்படுத்தி அரசு ஊழியரின் நடத்தை விதிகளை மீறிய செயலுக்காக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரால் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார் அவர்.

படித்தவர்கள் பாவம் செய்யக்கூடாது.
ReplyDelete