திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
எம்.எட். நுழைவு தேர்வு வேலூர் தனியார் கல்லூரியில் இன்று நடந்தது.
சுமார் 863 பட்டதாரிகள் இன்று தேர்வு எழுத வந்தனர்.
ஆனால் தேர்வு அறைக்குள்
அவர்களில் 250 பேருக்கு வினாத்தாள் வரவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தரவின்படி வினாத்தாள்கள் உடனடியாக
ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது. இதில் 190 பேர் மட்டுமே வழங்கப்பட்டது.
வினாத்தாள் குறைவாக வந்ததால் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து 60 பட்டதாரி
ஆசிரியர்கள் தேர்வை புறக்கணித்தனர். பின்னர் மறுதேர்வு நடத்தவேண்டும்
எனக்கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...