Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லவிருக்கும் நண்பர்களுக்கு சில ஆலோசனைகள்

         புதிதாய் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாய் சேர, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லவிருக்கும் நண்பர்களுக்கு   வாழ்த்துகளுடன் சில ஆலோசனைகள் (அறிவுரைகள் அல்ல)

1. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சென்றுவிடுங்கள். அப்போதுதான் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையையும், அலுவலர்களையும் விரைவில் கண்டுபிடிக்கலாம்.

2. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லும் முந்தைய நாளே, எல்லா அசல் சான்றிதழ்களையும், சான்றொப்பமிடப்பட்ட நகல்களையும் (2 அல்லது 3 நகல்கள்) வரிசையாக அடுக்கி, குண்டூசி அல்லது 'ஜம்ப்' க்ளிப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
(அசல் சான்றுகள் தனியாக, நகல்கள் தனியாக)
உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3 அல்லது 4 வைத்துக் கொள்ளுங்கள்.

3. சான்றொப்பமிடாத நகல்களாக சரிபார்க்குமிடத்திற்கு கொண்டு போய்விட்டீர்கள் என்றால், பதட்டப்படாதீர்கள். அங்கே இருக்கும் அதிகாரிகளுள் யாரிடமேனும் அசல் சான்றுகளைக் காட்டி பெற்றுவிடலாம்.

4. சான்றிதழ்களை சரிபார்க்கக் கொடுத்துவிட்டு, மீண்டும் அவற்றை வரிசையாக எடுத்து உள்ளே வைத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு போதும் அலட்சியமாக கடைகளில், ரயிலில்,பேருந்தில்,ஆட்டோவில்,சரிபார்க்குமிடத்தில் என எங்கும் மறந்து சான்றிதழ்களை வைத்துவிடாதீர்கள்.

5. ஏதேனும் சான்றிதழ்களை மறந்து வந்துவிட்டாலோ அல்லது இல்லையென்றாலோ அங்கிருக்கும் அலுவலர்களை பதட்டமின்றி அதே சமயம் பணிந்து கேளுங்கள். அவர்கள் நிச்சயம் உங்களுக்கு வழிமுறைகளை சொல்வார்கள்.

6.திட்டமிட்டு முன் கூட்டியே செயல்படுங்கள். பதட்டத்தையும் கடைசி நேர பரபரப்பையும் தவிர்க்கலாம்.




2 Comments:

  1. Thank u very much. Very useful data for all.

    ReplyDelete
  2. Respected sir,
    I am working in junior Asst in Govt school (just 6 month only) .
    Now I am selected paper 2.
    What will I prepare myself?
    My 10th Original mark sheet sent with for my service record regularization.
    What can I do ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive