மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி.,யின் தலைவராக, ரஜனி ரஸ்தான், 64,
தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்.,
போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும், யு.பி.எஸ்.சி., யின் தலைவராக
உள்ள, பேராசிரியர் டி.பி.அகர்வாலின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து,
அந்த அமைப்பின் புதிய தலைவராக, யு.பி.எஸ்.சி., உறுப்பினராக, தற்போது
பணியாற்றும் ரஜனி ரஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஸ்தான், வரும்
சனியன்று புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். அரியானா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ்.,
அதிகாரியான ரஸ்தான், 2010 ஏப்ரல், 19ல், யு.பி.எஸ்.சி., உறுப்பினராக
நியமிக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...