Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு

         தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
        தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- 

          நான், பி.லிட்(தமிழ்)., பி.எட்., படித்துள்ளேன். மேலும், தமிழ் பண்டிட் பயிற்சியும் முடித்துள்ளேன். நான், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவள். கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் 150-க்கு 94 மதிப்பெண் பெற்றேன். இதைதொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டேன். பின்பு, தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண், ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. 
மறுத்து விட்டது
 நான், 100-க்கு 60.86 மதிப்பெண்கள் பெற்றதாகவும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களை பொறுத்தமட்டில் 61.44 கட்-ஆப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எனக்கு, 60.86 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பி.லிட்., பி.எட்., படித்தவர்களும், பி.லிட்.,படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். பி.லிட்., பி.எட்., படித்தவர்களுக்கு பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பி.லிட்., படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களுக்கு தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 
கட்-ஆப் மதிப்பெண்
 நான், பி.எட்., முடித்துள்ளேன். அதே போன்று தமிழ் பண்டிட்டும் முடித்துள்ளேன். தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு நிர்ணயித்துள்ள கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிகமாக 62.13 மதிப்பெண்கள் பெற்று விடுவேன். பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டதால் எனக்கு கட்-ஆப் மதிப்பெண் கிடைக்கவில்லை. எனவே நான், தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டு பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 
நோட்டீசு
 இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். 
மேலும், பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்றும் அவர் உத்தரவிட்டார். 




2 Comments:

  1. Clarification camp nadandhadhu. Appo correction pannalaiya sister?

    ReplyDelete
  2. Weightage mark release panniya pothu neenga sari parkkamal appothe ungal irandu vithamaana weightsge mark i um oppittu yethu ungalukku athigamaaga vanthatho Athai senduru Andre marriyirukkalame. Tharpothu thervagavillai yendrathum than purinthatho.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive