பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்க பொது செயலாளர் பி.சுந்தரேசன் நேற்று அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த மே 21ம் தேதி
நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்
சரிபார்த்தலில் கலந்து கொண்ட பார்வையற்றவர்களை கொண்டு பின்னடைவு
பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
குறிப்பாக தமிழை முதன்மை பாடமாக எடு த்து படித்து தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொண்ட பார்வையற்றவர்களை கொண்டு 94 பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், மாநகராட்சி பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட்ட துறை பள்ளிகள் (கள்ளர்), ஆதிதிராவிட நலப்பள்ளிகள், வனத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், மின்வாரிய பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களிலும் பார்வையற்றவர் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...