அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு
விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில்
வினியோகிக்கப்பட உள்ளது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி
பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான போட்டி
தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்.,26 ல் நடத்த உள்ளது. இன்ஜினியரிங்
பாடப்பிரிவுகளுக்கு பி.இ., அல்லது பி.டெக்., மற்றும் எம்.இ., அல்லது
எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், கணிதம், இயற்பியல்,
வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு எம்.ஏ., அல்லது எம்.எஸ்.சி., படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். மொத்தம் 55 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க
வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2014 ஜூலை 1 ல்
35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் திண்டுக்கல்
முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.,20) முதல் வினியோகிக்கப்படுகிறது.
ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள்,
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்வு கட்டணம் ரூ.300, மற்ற பிரிவினர் ரூ.600
யை பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி.,யில் சலானாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.,5 மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Is there any news about polytechnic TRB exam?
ReplyDeleteFLASH NEWS
ReplyDeleteஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் ...
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தொடர் உண்ணாவிரதம்.
இரவிலும் போராட்டம் தொடர்வதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
Satheesh Kumar Satheesh
August 18, 2014 at 9:50 PM
நண்பர்களே
உண்ணாவிரதம் 90% வெற்றி அடைந்துவிட்டது நாளையும் தொடர்கிறது தற்போது திருமதி சபீதா வருவதாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாக நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்
தயவு செய்து சென்னை அருகில் உள்ள மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்
முக்கியமாக 2013-2014 பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டுள்ளது
காஞ்சிபுரம், கடலூர் ,திருவள்ளூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி., சேலம், நாமக்கல், போன்ற வட மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை உண்ணாவிரத்திற்க்கு தங்கள் குடும்பத்தோடு வர வேண்டும்
நண்பர்களே இது நமது வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக வர வேண்டும் தற்போது 600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் ஆனால் நாம் பாதிக்கபட்டது 8000 நண்பர்கள் அதனால் கண்டிப்பாக நாளை அதிக அளவு நண்பர்கள் வர வேண்டும்
இப்போது நீங்கள்கேட்கவிட்டால் இனி எப்போதும் கேட்கமுடியாது.
Satheesh Kumar Satheesh
August 19, 2014 at 6:58 AM
நண்பர்களே
நமது கைது செய்யபட்ட நண்பர்களை காவல் துறையினரர் இன்னும் விடவில்லை
இன்று சரியாக காலை 9 மணி அளவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகை யிட உள்ளோம் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நண்பர்கள் அனைவரும் காலை 9 மணி முதல் 10 க்குள் ஆசிரியர்தேர்வு வாரியத்திற்க்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.