ஆலந்துார் பள்ளியில் நடந்த அறிவியல் மற்றும்
கணித கண்காட்சியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் வரவேற்பை
பெற்றன. ஆறு மாணவர்கள்: பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் உருவாக்கிய புதிய
கண்டு பிடிப்புகள் அடங்கிய அறிவியல் மற்றும் கணித கண்காட்சி ஆலந்துார் நிதி
மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் 50 அறிவியல் கண்டுபிடிப்புகள்
மற்றும் 15 கணித கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
அதை உருவாக்கிய மாணவர்கள், இதர பள்ளி
மாணவர்கள், ஆசிரியர்கள் பகுதிவாசிகளுக்கு விளக்கி கூறினர். அதில் சிறப்பு
அம்சமாக, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுநீரில்
கலந்துள்ள நச்சுத்தன்மையை நீக்கி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத
வகையில் மறுசுழற்சி செய்யும் புதிய நடைமுறையை ஆறு மாணவர்கள் கண்டுபிடித்து
காட்சிக்கு வைத்தனர். பார்வையாளர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பை
பெற்றது.
அந்த கண்டுபிடிப்புக்கு தலைமையேற்ற மாணவன்
மகேஷ் கூறியதாவது: தோல் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இருந்து
வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுகிறது. அந்த
கழிவுகளை மறுசுழற்சி செய்து, நச்சுத்தன்மையை நீக்கி வெளியேற்றுவது மிகவும்
எளிது. அதை அனைத்து தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க வேண்டும். நாளைய
சமுதாயத்தை பேணி காப்பது, இன்றைய சமூகத்தின் பொறுப்பு. இவ்வாறு அவர்
கூறினார்.
மேலும் சில...
மேலும் பழைய டியூப்லைட்டை எரிய வைப்பது,
அலுமினிய குழாய் மற்றும் கண்ணாடி தம்ளரில் இனிமையான இசையை உருவாக்குவது,
குடிநீர் தொட்டியில் நீர் நிரம்பியதும் அலாரம் அடிப்பது போன்ற பல்வேறு
புதிய கண்டு பிடிப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...