மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யும் முறைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில்
டாக்டர் ராதாகிரு ஷ்ணன் விருது வழங்கப் பட்டு வருகிறது. செப். 5க்கு முன்
னர் விருது பெறுபவர்கள் விபரம் அறிவிக்கப்படுகிறது.
விருது பெறுபவர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி செய்த ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தன் சுயவிபரம் அடங்கிய
விண்ணப்பத்தை பள்ளி தலைமையாசிரியருக்கு அளிக்க வேண்டும்.
பின் மாவட்ட கல்வித்துறைக்கு செல்லும் விண்ணப்பம் கூடுதல் விபரங்களுடன்
பள்ளிக்கல் வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் மா நில அரசு
சார்பில் சுமார் 350 ஆசிரியர்களுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது.
மத்திய அரசு விருது பெற ஏற்கனவே மாநில அரசு விருது பெற்றிருக்க வேண்டும்
என்ற விதிமுறையுடன் மாநில அரசு விருதுக்கான தேர்வு முறையே இதிலும்
பின்பற்றப்படுகிறது. இந்த விருதுகள் பெற அரசியல் தலை யீடு, பரிந்துரைகள்,
அவரவர்களே விருதுக்காக விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆசிரியர்கள் மத்தியில்
கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விருது பெறுவதற்கான தேர்வு முறையை
மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “பல சிறந்த ஆசிரியர்கள் தங்களுக்கு
விருது வழங்கவேண்டும் என அவர்களே விண்ணப்பம் அளிக்க விரும்புவதில்லை.
மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை இல்லாமல் கல்வித்துறை சார்ந்தவர்கள், சமூக
ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய ஒரு குழுவினர் சிறந்த ஆசிரியர்களை
தேர்வு செய்யவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...