Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்: 

          முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
           ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் போக, இந்தப் பட்டியலில் புதிதாக யாராவது இடம்பெற்றிருந்தால் அவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வின், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 592 பேரின் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) விவரங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேரும், இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேரும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண்(வெயிட்டேஜ் மதிப்பெண்) கணக்கிடப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை இந்த மையங்கள் செயல்படும். இங்கு தகுதிகாண் மதிப்பெண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் தகுதிகாண் மதிப்பெண் விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.




1 Comments:

  1. என்னுடைய PG TRB (PHYSICS) Mark 93,இப்போ reresult வந்தாச்சு, அதுபடி பார்த்தால் எனக்கு 1 mark add ஆகணும், ஆனால், இப்பவும் 93ன்னு தான் வருது. மறுபடியும் answer key check பண்ணியாச்சு. select ஆகுரோம் ஆகல இது இரண்டாவது விசயம், exam எழுதின அனைவருக்கும் mark correct-ட போடணும்ல, ஏன் TRB போடல? எல்லாரும்தான் பணம் கட்டி exam
    எழுதுறோம். ஏன் இந்த பாரபட்சம்? TRB எதையுமே சரியா பண்ணல, தேர்வு எழுதினவங்கல நோகடிச்சதத்தவிர..................

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive