துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடங்கி
வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும்
சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், நர்சிங், பி.பார்ம், பிபிடி, ரேடியோலஜி,
பிசியோதெரபி உள்ளிட்ட 8 விதமான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த
இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக 18 ஆயிரம் விண் ணப்பம் வினியோகம்
செய்யப்பட்டது.இதில் 8 ஆயிரத்து 400 பேருக்கு கவுன்சலிங்கில் கலந்து கொள்ள
அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென் னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நேற்று முதல் கவுன்சலிங் தொடங்கியது. நேற்று முதல்கட்டமாக, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் நடைபெற்றது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கவுன்சலிங் நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி வரை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...