Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நேதாஜிக்கு பாரத ரத்னா தேவை இல்லை: மரணத்தின் மர்ம முடிச்சை அவிழுங்கள்!

         இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
         இவர் தைவான் நாட்டில் 18-8-1945 அன்று ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985ல் இறந்து விட்டதாகவும் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட போதும் அறுபதாண்டுக்குப் பிறகும் நேதாஜி இறப்பின் மர்மம் விலகவில்லை.

நேதாஜி பிழைத்திருந்ததற்கான சாத்தியங்கள், சாட்சியங்கள் தவிர்க்க முடியாதவை. அவர் மீது மக்கள் வைத்திருந்த அளவு கடந்த மரியாதையை வெளிப்படுத்த முடியாமல் தடுத்தது யார்? அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் முடிவுகள் வெவ்வேறாக இருப்பது ஏன்? என்பது புரியாத மக்கள் அவர்களின் அன்புக்குரிய தலைவர் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்படுதை நம்பவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டின் ’பாரத ரத்னா’ விருதுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக யூகங்கள் உலவி வருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘நேதாஜி கடந்த 1945-ம் ஆண்டு முதல் காணாமல் போய் விட்டார். ஒருவரின் இறப்புக்கு பிறகு, அந்நபருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றால் முதலில் அவர் இறந்ததை உறுதிப்படுத்த வேண்டும். அவரை கவுரவிக்க வேண்டும் என்றால் அவர் எப்போது, எங்கே, எப்படி இறந்தார்? என்பது தொடர்பான ரகசியங்களை முதலில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி உள்பட 43 பேருக்கு பிறகு நேதாஜிக்கு இப்போது பாரத ரத்னா விருது அளிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. பாரத ரத்னாவை விட நேதாஜியின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. இந்த விருதை வாங்க எங்களில் யாரும் போக மாட்டோம்’ என்று நேதாஜியின் குடும்பத்தினர் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive