சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சுந்தரவதனம்தாக்கல் செய்துள்ள
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில்கூறியிருப்பதாவது:– கோர்ட்டு அவமதிப்பு
தமிழ்நாடு மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு தலைவர் பதவி பலஆண்டுகளாக
நிரப்பப்படாமல் உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை
எடுக்காததால், இந்த ஐகோர்ட்டில்வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த
ஐகோர்ட்டு, மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை 3மாதத்துக்குள் தகுந்த
நபரை கொண்டு நிரப்பவேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால்,இதுவரை
அந்த பதவியை நிரப்பவில்லை. எனவே, கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத தலைமை
செயலாளர்
உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் இல்லை
இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த 2வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர்முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு,
ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற தலைமை நீதிபதியைத்தான் நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஓய்வுப்பெற்றதலைமை நீதிபதி யாரும் அரசுக்கு கிடைக்கவில்லை. இதனால், தலைவர் பதவி நியமனம் தொடர்பான சட்டத்தில்திருத்தம் கொண்டு உள்ளோம். அதில், தலைவர் பதவிக்கு ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதியையும்நியமிக்கலாம் என்று வரையறை செய்ய உள்ளோம். இந்த பணிகளை மேற்கொள்ள 8 வாரங்கள் தேவைப்படும்''
என்று வாதிட்டார். கால அவகாசம் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப அரசுக்கு கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணை அக்டோபர் 6–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...