நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும்
பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்க வாறு பணியிட மாறுதல் பெறுவதற்கு
ஆவன செய்ய வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட தேசிய மகளிர் வங்கி
உள்ளிட்ட 27 பொதுத்துறை வங்கி களுக்கு சொந்தமாக நாடு முழுவதிலும்
லட்சக்கணக்கான கிளை வங்கி கள் உள்ளன.இவற்றில் சுமார் 2.5 லட்சம் பெண்
பணியாளர்கள் வேலை செய்துவருகின்றனர். திடீர்இடமாற்ற உத்தரவையடுத்து,
பெற்றோர் வசிக் கும் இடத்தை விட்டு பிரிந்து தொலைதூர பகுதிகளுக்கு மாற்ற
லாகி செல்லும் திருமணமாகாத பெண் பணி யாளர்கள், தாங்கள் பாதுகாப்பற்ற
சூழலில்இருப்பதாக உணர்கின் றனர்.
இதேபோல், திருமணமாகி கணவன், குழந்தை களுடன்
வாழ்ந்துவரும் பெண் பணியாளர்கள், குடும்பத்தினரைப் பிரிந்துவேறு
மாநிலங்களுக் கோ, வேறு மாவட்டங் களுக்கோ பணியிட மாற்றம் பெற்று செல்லும்
போது, மன உளைச்சலுக்கு ஆளாக நேர்கின்றது.இவற்றை கருத்தில் கொண்டு,
வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்கவாறு பணியிட
மாறுதல் பெறுவதற்கு ஏற்றவாறு ஒரு புதிய பணியிட மாற்றக் கொள்கையை வரை
யறுக்குமாறு அனைத்து பொதுத்துறை வங்கி களின் தலைமைக்கும் அறிவுறுத்தி
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ்இயங்கி வரும் நிதிச்சேவைத் துறை சுற்றறிக்
கை அனுப்பியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...