இலவசங்களை நிறுத்திவிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை அரசு
கட்டித்தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்
வலியுறுத்தினார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 7,837 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிகளில் கழிப்பறைகள் இன்றியமையாத தேவையாகும்.
இந்திய விடுதலையின் 68-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் நேரத்தில் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பது வேதனையான விஷயமாகும்.
இலவசப் பொருகள் வழங்குவதற்காக அரசு செலவிடும் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக ஒதுக்கியிருந்தால்கூட அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை கட்டியிருக்க முடியும். தமிழகத்தின் நகரங்களில் 45 சதவீத மக்களும், கிராமங்களில் 73 சதவீத மக்களும் திறந்தவெளிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, வீண் இலவசங்களை நிறுத்திவிட்டு, அதற்காகச் செலவிடப்படும் நிதியில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய பள்ளிகளைக் கட்டி, தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். மக்களுக்கு கழிப்பறைகளை இலவசமாக கட்டித்தர வேண்டும் என்றார் ராமதாஸ்.

MARUTHUVAR IYYA !!!
ReplyDeletePlease Make TamilNadu Government Appoint Teachers first.