ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
வெளியிடப்பட்டுள்ள, நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களுக்கான நியமன கவுன்சலிங்,
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், செப்டம்பர், 5ம் தேதி
வரை நடக்கிறது.
தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட பட்டியலில்
இடம் பெற்றுள்ள, 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான நியமன கவுன்சலிங், ஆன்
லைன் மூலம் நடத்தப்படுகிறது.
இன்று முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்
உள்ள காலிப்பணிடங்களுக்கு), நாளை (ஆக., 31) முதுகலை ஆசிரியர்கள் (வேறு
மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு), செப்டம்பர், 1, இடைநிலை
ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கு), செப்டம்பர்,
2, இடைநிலை ஆசிரியர்கள், (வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு),
செப்டம்பர், 3, பட்டதாரி ஆசிரியர்கள், (மாவட்டத்துக்குள் உள்ள
காலிப்பணியிடங்களுக்கு), செப்டம்பர், 4, 5, பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு
மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு). பணிநாடுனர்களுக்கு, ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, அவர்களது
இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில் நடக்கும் கவுன்சலிங்கில், அவர்களது
கல்விச்சான்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவு கடிதம் ஆகியவற்றுடன்
கலந்து கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான கவுன்சலிங்,
காலை, 9 மணி முதல், ஆன் லைன் மூலம் நடத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...