'தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள
அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என ஆசிரியர் பணியிடங்களுக்கு
ஆசிரியர் தேர்வாணையம் கடந்த, 2013, மே மாதம் 782 பணியிடங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வுக்கு
ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 3110 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால்,
இப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஏற்னவே தேர்ந்தெடுக்கப்பட்ட
10ஆயிரத்து 548 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக 5 ஆயிரம்
வழங்கப்பட்டு வந்தது. இத்துடன் கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து 7
ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டு
முதல் பணியாற்றும் இத்தகைய பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10
ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்து தர வேண்டும் இவ்வாறு,
அவர் அறிக்கையில் தெரிவித்து
சென்னை டி.நகர் பனகல்பார்க் பூங்காவில் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெறுகிறது.....
ReplyDeleteஆதரவு தாரீர் நண்பர்களே....
ஆண்டவன் நிச்சயம் நீதியின் பக்கம் இருக்கிறார்...
porata ventum varalaru ungali nicham pathivu sayum
Deletepurachi tholvi ataivuthuilllai
nichayam unmai vellum
ReplyDeleteporata ventum varalaru ungali nicham pathivu sayum
ReplyDeletepurachi tholvi ataivuthuilllai