தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அனைத்திந்திய ஆசிரியர் பேரவை கோரிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோரை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் நேரில் வலியுறுத்தல்:
அனைத்திந்திய
ஆசிரியர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள்,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், அரசு முதன்மை
செயலர் திரு.சபீதா அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர்
திரு.ராமேஸ்வரமுருகன் அவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து
மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் பணிப்புரிந்து வரும்
தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என
வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட
ஆசிரியர்களையும் உடன் அழைத்துச் சென்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை
வலியுறித்தினார். மேலும் அணைத்து மாவட்டகளில் இருந்து புதுப்பெயர் பட்டியல்
தயாரிக்க ஆவணம் செய்யுமாறு வலியுறித்தினார். கோரிக்கையை பரிசீலித்து
உரிய நடவடிக்கை எடுப்பதாக அனைவரும் உறுதி அளித்தனர்.
நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2001 முதல் தொழிற்கல்வி ஆசிரியராக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாத ஊதியமாக ரூ.2000 ஊதியம் பெற்று பணிபுரிந்து வருகிறேன். 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து, இதுவரை பணி நிரந்தரம் சம்மந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. என்னிடம் பயின்ற பல மாணவர்கள் இன்று அரசு நிரந்தரப் பணியில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆனால் என்னைப் போன்ற கிட்டத்தட்ட 300 தொழிற்கல்வி ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாண்புமிகு.தமிழக முதல்வர் அம்மா அவர்கள் எங்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து பணி நிரந்தரம் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDelete