Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களே இல்லாமல் எப்படி படிப்பது? - ஜூனியர் விகடன்

        பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர் சமூகத்தினர். இவர்களும் கல்வி, வேலை வாய்ப்பில் சமநிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கிறது என்பதுதான் வேதனை.கள்ளர் சீரமைப்புத் துறை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் 285 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் கஷ்டப்படக் கூடாது என்று, 52 விடுதிகளையும் நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் 37 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக அரசு சொல்கிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 சதவிகித கள்ளர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவு கேள்விக்குறியாகி வருகிறது.

              சமீபத்தில் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய சேடப்பட்டி அருகேயுள்ள பூசலாபுரம் கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேசினோம். ''பொதுவாகப் பள்ளியில் வகுப்பறை இல்லை, கழிப்பறை இல்லை, காம்பவுண்ட் சுவர் இல்லை என்றுதான் மாணவர்கள் போராடிப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், நாங்கள் எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர், பாடவாரியாக ஆசிரியர்கள் இல்லை என்று போராட வந்திருக்கிறோம். கடந்த வருடம் எங்கள் பள்ளி உயர் நிலையில் இருந்து மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. நாங்களும் உள்ளுரிலேயே ஹையர் செகண்டரி வந்துவிட்டது என்று, தொடர்ந்து அங்கேயே படித்தோம். ஆனால், இதுவரைக்கும் ஹையர் செகண்டரிக்கு ஆசிரியர்கள் போடவில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான லேப்களோ கணினி அறையோ இல்லை.

கப்பலூர் கள்ளர் பள்ளியில் இருந்து வாரம் ஒரு நாள், டெபுடேஷனில் ஒரு ஆசிரியர் வருவார். இயற்பியல் ஆசிரியர் என்பதால், அன்று முழுவதும் அதே பாடத்தைத்தான் நடத்துவார். மற்ற சப்ஜெக்ட் மாணவிகளும் அதைத்தான் கேட்க வேண்டும். மீண்டும் அடுத்த வாரம்தான் பாடம். அதுவரை வேறு எதையும் படிக்காமல் பொழுதைப் போக்க வேண்டும்.

எங்கள் பள்ளியில் பயோமேத்ஸ், வணிகவியல் பிரிவுகளும் இருக்கின்றன. எதற்கும் ஆசிரியர்கள் இல்லை. இப்படியே போனால் பொதுத்தேர்வில் எப்படி பாஸாகப் போகிறோம் என்று தெரியவில்லை. எதற்காக எங்கள் பள்ளியை ஆசிரியர்களே போடாமல் ஹையர் செகண்டரியாக்க வேண்டும். எங்களைப் போன்ற மாணவிகளின் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டும்? எங்கள் ஊர் பெரியவர்கள் பலதடவை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அதனால்தான் நாங்களே கலெக்டரிடம் நிலைமையைச் சொல்ல வந்தோம்'' என்றனர்.

நாம் விசாரித்துப் பார்த்ததில் பூசலாபுரம் மட்டுமல்ல... மூன்று மாவட்டங்களிலும் உள்ள கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 40 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது என்ற தகவல் கிடைத்தது. ''பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டத்துக்கு ஒரு சி.இ.ஓ-வும், இரண்டுக்கும் மேற்பட்ட டி.இ.ஓ-க்களும் இருக்கின்றனர். ஆனால், 285 பள்ளிகள் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறையில், ஒரு ஜே.டி கன்ட்ரோலில்தான் அனைத்து பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளைப் பார்வையிட, ஆசிரியர்களைக் கண்காணிக்க அதிகாரிகள் இல்லை. இப்படியே போனால், கள்ளர் பள்ளிகளின் நிலைமை மோசமான நிலைக்குப் போய்விடும்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கள்ளர் சீரமைப்புத் துறையின் இணை இயக்குநர் அமுதவள்ளி, ''ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது உண்மைதான். அதற்குக் காரணம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம்தான். காலியிடங்களை நிரப்பும்போது முதலில் அரசுப் பள்ளிகள், அடுத்து மாநகராட்சிப் பள்ளிகள், அப்புறம்தான் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கான ஆசிரியர்களை ஒதுக்குகிறார்கள். இந்த மூன்று மாவட்டங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதால் பல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிப்பது இல்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நிதி ஆதாரம் இல்லை. இருந்தாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், எங்கள் துறையின் கமிஷனரிடம் கூறியுள்ளேன். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்'' என்றார்.

நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள் அழிந்துவிடக் கூடாது. மாணவர்கள் நலன் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




2 Comments:

  1. sir naan entha govt school la velaseiyavum thayar govt ennakku kuduga job naan 10 varusama govt school pta la iruken 12 std 100%4 year sa kudukuren ,.2011,2012,2010 rural talent 9th std,2012,2013, nmms talent test 8th std 21 student ta select aeirukaga but tet 90 eduthu select agee tamil weidage 61.38 eduthu iruken.........entha school na enna student ellorum nallavanga vali nadathura namma ...nalla vali nadathunum...............

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive