அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது கடந்த ஆண்டைவிட காலி இடங்கள் அதிகரிப்பு:
என்ஜினீயரிங்
கலந்தாய்வு இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. ஆனால் கடந்த ஆண்டைவிட
இந்த ஆண்டு 20 ஆயிரம் இடங்கள் அதிகமாக காலியாக்கிடக்கும் நிலை உள்ளது.கலந்தாய்வு இன்று முடிகிறதுதமிழ்நாட்டில்
541 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு
ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு
சேர்ப்பதற்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது. ஒரு
மாதமாக கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம்
உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 77 இடங்களில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் இதுவரை
சேர்ந்துள்ளனர். கலந்தாய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்தும் 56 ஆயிரம்
பேர் இதுவரை வரவில்லை.
கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முடிவடைகிறது. கடந்த
ஆண்டு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளில்
சேர்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் பேர்தான் கலந்தாய்வு
மூலம் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டைவிட இந்த
ஆண்டு 20 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கை குறைகிறது. கலந்தாய்வு
இன்று முடிவடைந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 1-ந் தேதி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்கின. 6, 7-ந் தேதிகளில் கலந்தாய்வுகலந்தாய்வு
இன்று (திங்கட்கிழமை) முடிந்தாலும். பிளஸ்-2 தேர்வில் பெயிலான மாணவர்கள்
உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியாக கலந்தாய்வு 6-ந் தேதி
நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில்
வந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெயரை
பதிவு செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அருந்ததியின
மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் சில இடங்கள் காலியாக
உள்ளன. அந்த இடங்களில் எஸ்.சி. இன மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு
7-ந் தேதி நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் 7-ந் தேதி காலை 9 மணி
முதல் பகல் 1 மணி வரை தங்கள் பெயரை பதிவு செய்து பின்னர் கலந்தாய்வில்
கலந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் கலந்தாய்வுக்கு
வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...