Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடுப்பு கடிதம் கொடுக்காததால் நாள் முழுவதும் நாற்காலியில் நிற்க வைக்கப்பட்ட சிறுமி

         மதுரவாயல் பல்லவன் நகர் பி.டி.சி காலனி 1வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேணுகோபால் (42). தொழிலதிபர். பழைய வில்லன் நடிகர் ராமதாசின் கடைசி மகன். இவரது மகள் அஸ்வினி (9). கோயம்பேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 30ம் தேதி உடல்நல குறைவு காரணமாக அஸ்வினி, பள்ளிக்கு செல்லவில்லை. 31ம் தேதி பள்ளிக்கு சென்றாள்.
 
        அப்போது, விடுப்பு கடிதம் கொடுக்காததால் அஸ்வினியை, வகுப்பாசிரியை காலை 10 மணி முதல் மாலை 3.30 மணிவரை நாற்காலி மீது நிற்க வைத்துள்ளார். மாலையில் வீடு திரும்பிய அஸ்வினி, கால் வலியால் அழுதாள். நடக்க முடியாமல் தவித்தாள். பின்னர், 3 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.

           இதுகுறித்து சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜிடம், கடந்த சில நாட்களுக்கு முன், வேணுகோபால் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து வேணுகோபால் கூறியதாவது, விடுப்பு கடிதம் கொடுக்காததால், காலை முதல் மாலை வரை எனது மகளை நாற்காலியில் நிற்க வைத்துள்ளனர். மதிய உணவை நின்றபடியே சாப்பிட்டிருக்கிறாள்.வீடு திரும்பியதும் கால் வலி என கூறி, தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை. இதுபற்றி தலைமை ஆசிரியையிடம் கேட்டேன்.

அதற்கு நாங்கள் இப்படி தான் தண்டனை கொடுப்போம். எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என மிரட்டல் தோணியில் பேசினார். பதிலுக்கு நானும் பைபிள் படிப்பவன். நான் மருத்துவ செலவுக்கு பணம் கேட்கவில்லை. எனது மகளுக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க வந்தேன் என கூறிவிட்டு வந்து விட்டேன். இதையடுத்து, வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஸ்வினியை சேர்த்தேன். அங்கு பரிசோதனை செய்ததில், எனது மகளின் முதுகு தண்டில் நீர் சேர்ந்துள்ளது என டாக்டர் கூறினார். சிறுநீர் கழிக்கவும் முடியாமல் எனது மகள் கடும் அவதியடைந்து வருகிறாள். தொடர்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி பள்ளி கல்வித்துறைக்கும் புகார் அனுப்பியுள்ளேன் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive