'டில்லி
நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான், இப்போது, மத்திய
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இந்த பெருமை, பிரதமர்
மோடி எனக்கு தந்தது,'' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
டிலலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:என் வாழ்க்கையில்
முக்கியமான தருணம், பிரதமர் மோடி என்னை, 'இளைய சகோதரி' என அழைத்தது தான்.
அதை நினைத்தால், இப்போதும்
எனக்கு கண்ணில் நீர் வழியும்; தொண்டை அடைத்துக் கொள்ளும்.நான் சிறு வயதில்,
டில்லி நகர வீதிகளில், வீடுவீடாக அழகு சாதன பொருட்களை விற்பனை
செய்துள்ளேன். என் தாய், டில்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில், 'ஹவுஸ்
கீப்பிங்' எனப்படும், சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை வகித்து
உள்ளார். நான், டில்லி, ஆர்.கே.நகர் கூரைப் பள்ளி யில் தான் படித்தேன்.
என் தாய் எந்த ஓட்டலில் வேலை பார்த்தாரோ, அந்த
ஓட்ட லின் எதிரே பிரமாண்ட பங்களாவில் இப்போது நான் வசிக்கிறேன். இதெல்லாம்,
என்னை இளைய சகோதரியாக ஏற்று கொண்ட பிரதமர் மோடி வழங்கியவை.என் முந்தைய
பணிகளைப் பார்த்து, அமைச்சர் பதவியை மோடி வழங்கவில்லை. என் மீது நம்பிக்கை
வைத்து இந்த பதவியை வழங்கியுள்ளார்.
தரையை பெருக்கச் சொன்னாலும் அதை சிறப்பாக செய்ய
வேண்டும் என நினைப்பவள் நான். பிரதமர் மோடி எனக்கு வழங்கியுள்ள இந்த
பொறுப்பை நான் எந்த அளவுக்கு சிறப்பாக செய்துள்ளேன் என்பது போகப் போக
அனைவரும் அறிந்து கொள்வர்.இவ்வாறு அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
பழைய நினைவு ஏழை மக்களை பார்க்கும்போது ஒவ்வொரு நிமிடமும் வந்தால் சரி
ReplyDelete