Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புறக்கணிப்பு! : தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி... ஆசிரியர்களுக்குள் "ஈகோ' பிரச்னை

       திருச்செங்கோடு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சியை, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
 
         நேற்று இரண்டாம் நாள் பயிற்சிக்கு, 90க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள வட்டார வள மையத்திற்கு சென்றனர்.

            திருவேங்கடம் என்ற துவக்கப்பள்ளி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கான "பைக்' ஸ்டாண்டில், தனது பைக்கை நிறுத்தினார். மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர், வழக்கமான பைக் ஸ்டாண்டில், தனது மொபெட்டை நிறுத்தினார். அப்போது, துவக்கப்பள்ளி ஆசிரியரின் பைக், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. அதைப்பார்த்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை அனுப்பி, கீழே விழுந்த பைக்கை எடுத்து நிறுத்தினர். அதில், பைக்கின் சைடு கண்ணாடி உடைந்து விட்டது. இதையறிந்த, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவங்கும் நிலையில், அந்த வகுப்பை அப்படியே புறக்கணித்துவிட்டு வெளியேறினர். பள்ளி வளாகத்தில், 90 துவக்கப்பள்ளி ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை "ஈகோ'வாக மாறியது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சிவகாமி, தலைமையாசிரியர் லோகநாதன் ஆகியோர், புறக்கணிப்பு தொடர்பாக, இருதரப்பு ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினர். "டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., ஆகியோர் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர். புறக்கணிக்கப்பட்ட வகுப்பு, கூடுதல் சி.இ.ஓ., உத்தரவுக்கு பின், பின்னர் நடத்தப்படும். ஆசிரியர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்தனர்' என உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.




3 Comments:

  1. Dear Padasalai,
    My humble opinion is please don't publish such kind of irrelevant news.
    Such news are not at all going to make any impression on readers.
    It is like making a hero out of a comedian.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive