அரசுப்
பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை
மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வேலூர் மாவட்ட அரசு ஆசிரியர்
பயிற்சி மையம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரி யர்களைக் கொண்டு வீடியோ
பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் முயற்சியாக தமிழ்,
ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் வீடியோ வடிவில்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ஆசிரியர்
பயிற்சி மைய முதல்வர் பஷீர் அகமது செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை
கூறும்போது, ''ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா
என்பதில் பல சந்தேகங் கள் எழுகிறது. இதற்காக வீடியோவில் பாடங்களை
தயாரித்துக் கொடுத்தால் எளிதாக மாணவர்களுக்கு புரியும். காவேரிப்பாக்கம்
ஒன்றி யத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 25 பேர் உதவியுடன்
தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை
வீடியோவாக தயாரித்துள்ளோம்.
உதாரணமாக அறிவியல்
பாடத்தில் காளான்கள் என்ற தலைப்பில் பாடம் நடத்தும்போது, அது எவ்வாறு
வளர்கிறது என்பதை வீடியோ பதிவாக மாணவர்களுக்கு காண்பிக்கப்படும்.
பின்னணியில் பாடங்கள் வசனமாக ஒலிக்கும். சமூக அறிவியல் பாடத்தில்
மொகலாயர்கள் ஆட்சி குறித்தும் அவர்களது சாதனைகள் குறித்தும் வண்ணப்
படங்கள் இடம் பெறும்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து
அரசுப் பள்ளிகளிலும் லேப்டாப், புரெஜெக்டர் வழங்கப் பட்டுள்ளது.
புரெஜெக்டர் உதவி யுடன் இனி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். அதேபோல,
அடுத்த முயற்சியாக 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை
வீடியோவாக தயாரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது தயாரித்துள்ள வீடியோ
பாடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநரிடம் அளிக்கப்படும்.
ஒப்புதல் கிடைத் ததும் வரும் அக்டோபர் மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப்
பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்படும்'' என்றார்.
அப்போது வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா உடனிருந்தார்.
ஊரில் ஒரு பெரிய மனுஷன்.
ReplyDeleteபுத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.
ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி... தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.
ஒரு மகன் விவசாயி.
ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.
ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.
அடுத்த மகன் வியாபாரி.
ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.
ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.
கடைசி மகனோ அரசியல்வாதி.
அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.
அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.
பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.
"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"
கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.
"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.
கேள்வி:----
அந்த லூசுங்க நாம் தானா ???