அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை ஆகஸ்ட் 14-ஆம்தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் கே.பாலசுப்ரமணியன் உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த பொதுநல மனு விபரம்: தமிழக அரசின் தொடக்கக்
கல்வி இயக்குநரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் மழலையர் பள்ளி நடத்த
வேண்டும். ஆனால், சென்னையில் செயல்படக் கூடிய 760 பள்ளிகள் அரசின்
அனுமதி பெறாமல், சட்ட விரோதமாகச் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகள்
பெற்றோர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் பல
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, சென்னையில் சட்ட விரோதமாகச் செயல்படும் 760பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும்,
செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என
மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்திய நாராயணன்
ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சில பள்ளிகள் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட
தனியார் பள்ளிகள் சட்டம் எங்களுக்குப் பொருந்தாது எனவும், சிலர் நாங்கள்
பகல் நேர மையம் நடத்துகிறோம் எனவும், சிலர்ஏற்கெனவே எங்களுக்கு அங்கீகாரம் உள்ளது எனவும் பள்ளிகள் தரப்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நாங்கள் சரிபார்க்க முடியாது. இது அரசைப்பொருத்தது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தகால அட்டவணையை அரசு தலைமை வழக்குரைஞர் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த 25-ஆம்தேதி ஏற்கெனவே அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகும் அவர்கள்விதிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில் பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எனவே, விதிமுறைகளை பின்பற்ற கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, பள்ளியை மூடுவது தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்த காலஅட்டவணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய
வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...