தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி
டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்., முடிப்பது
அவசியம்.பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தபால் வழியில்
பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட
பல பல்கலையில் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியர் வகுப்பறை பயிற்சியாக, 40
நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.பி.எட்., என்பதால், உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் மட்டுமே வகுப்பறை பயிற்சியை
எடுத்துக்கொள்ளவேண்டும் என, ஸ்டடி சென்டர்கள் வலியுறுத்துகின்றன. ஆனால்,
சேலம் மாவட்டத்தில் துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், 100க்கும்
மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான வகுப்பறை பயிற்சிஅனுமதிக்கு, தொடக்கக்கல்வி அலுவலகத்தை
அணுகியபோது, நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம்
நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்கள் அனைத்தும்,
9 மற்றும், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தினால் மட்டுமே, பி.எட்., பட்டம்
வழங்கப்படும் என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், இருதலைக்கொள்ளி
எறும்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து
ஆசிரியர்கள் கூறியதாவது:தொடக்கக்கல்வி அலுவலகத்தில், நடுநிலைப்பள்ளிகளில்
பயிற்சி எடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, ஸ்டிரிக்டாக
கூறிவிட்டனர்.
ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்களோ, 9, 10ம் வகுப்புகளில் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். ஸ்டடி சென்டர்களோ, "தமிழகம் முழுவதும் இதே நிலை' என்கின்றனர். சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். படிப்பை முடிக்கும் வேலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து அலைக்கழித்து வருவதால், என்ன செய்வதென தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...