வகுப்பறைகளில் நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டம்
அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கும்,
தனியார் பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை.
இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 அரசுத் தேர்வுகளில் மாணவ,
மாணவியரை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பது தான் மாணவர் சேர்க்கை அதிகரிக்க
வழிவகுக்கும் என்பதால் தனியார் பள்ளிகள் அனைத்தும் மதிப்பெண்களை உற்பத்தி
செய்யும் மிஷின்களாக மாணவர்களை மாற்றி வருகின்றன.
இதற்காக அங்கு பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் நின்று கொண்டு பாடம்
எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இதனால் ஒரு
நாளைக்கு 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆசிரியர், ஆசிரியைகள்
வகுப்பறைகளில் தொடர்ந்து நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டியிருப்பதால்,
அவர்கள் இளம் வயதிலேயே மூட்டு வலியால் பாதிப்படைகின்றனர்.
மேலும் சில தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு சேர்களே
இருப்பதில்லை. இதனால் ஒரு நாளில் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆசிரியர்கள்
வலுக்கட்டாயமாக நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அனைத்து மாணவ, மாணவியரின்
கவனத்தை பாடத்தின் மீது ஈர்க்க ஆசிரியர், ஆசிரியைகள் குரலை உயர்த்தி சொல்லி
கொடுக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் உத்தரவுகளை
பிறப்பித்து வருகின்றன.
இளம் வயதிலேயே மூட்டுவலி பாதிப்பு
மேலும் சில தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு சேர்களே
இருப்பதில்லை. இதனால் ஒரு நாளில் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆசிரியர்கள்
வலுக்கட்டாயமாக நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அனைத்து மாணவ, மாணவியரின்
கவனத்தை பாடத்தின் மீது ஈர்க்க ஆசிரியர், ஆசிரியைகள் குரலை உயர்த்தி சொல்லி
கொடுக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் உத்தரவுகளை
பிறப்பித்து வருகின்றன.
பணி முடிந்து வீட்டிற்கு சென்றாலும் மறுநாள் நடத்த வேண்டிய பாடம் தொடர்பான
குறிப்புகள், மாதிரிகள் தயாரிப்பதற்கு ஆசிரியர், ஆசிரியைகள் அதிக நேரம்
செலவிட வேண்டியுள்ளது.
இதனால் வீட்டிலும் அவர்களுக்கு பணிப்பளு அதிகரித்துள்ளது. ஆசிரியர் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அரசு வேலை கிடைக்காததால், தனியார்
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் வழங்கப்படும் சொற்ப ஊதியத்திற்காக பல
ஆசிரியர்கள் இவ்வளவு சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.இது குறித்து,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன்
கூறுகையில், “தனியார் பள்ளிகளின் விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு பல
பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும்
புரியும்படியாக பாடம் எடுத்தாலே போதுமானது.
சில வகுப்புகளில் 80, 100 என மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும்போது,
ஆசிரியர்கள் எவ்வளவுதான் உயர்த்தி குரல் எழுப்பினாலும், மாணவர்களுக்கு போய்
சேருவதில்லை. ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விதிமுறையை தனியார்
பள்ளிகள் முதலில் பின்பற்ற முன்வர வேண்டும். நின்றுகொண்டு பாடம் எடுப்பது
ஆசிரியருக்கான மாதிரி நடத்தை விதிமுறை என்றாலும், மற்ற நேரங்களில் அவர்கள்
அமர அனுமதிக்க வேண்டும்,” என்றார்.
ஆசிரியர்களை சுதந்திரமாக பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும்
ReplyDeleteகட்டுப்பாடுகள் கூடாது
இதைவிட பல கொடுமைகள் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ள்களில் நடக்கிறது.கொத்தடிமைகளைப் போல நடத்தப் படுகிறார்கள்.
ReplyDeleteNamakkal schools are very worst. They are doing business. All private schools in Namakal should be closed. They are torturing students and teachers:-)...
ReplyDeletemany of private schools are like thihar jail
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர்கள் நின்றுகொண்டு பாடம் போதித்தல் மிகவும் நல்ல முறை ஏனென்றால்
ReplyDeleteஅப்போதுதான் வகுப்பறையில் எல்லா மாணவரையும் பார்க்க முடியும் அதேசமயம் எல்லா நேரமும் நின்றுகொண்டு பாடம் நடத்துதல் முடியாது இன்னொரு உண்மை என்னவென்றால் பள்ளி ஆண்டாய்வு நடைபெறும் நேரத்தில் பாடம் போதிப்பதற்கும் மற்ற நேரங்களில் போதிப்பதற்கும் மிக மிக பெரிய வித்தியாச இடைவெளி அனேக பள்ளிகளில் உள்ளது.ஆசிரியர்கள் தங்கள் உண்மையான விருப்பத்துடன் பாடம் போதிப்பார்கள் என்றால் உட்கார்ந்துகொண்டே பாடம் போதித்தாலும் அதனால் மாணவர்கள் நிறைந்த பலன் அடைய முடியும்....வருங்கால இந்தியா உண்மையிலேயே ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது என்று அனைத்து ஆசிரியர்களும் உணர்கிறவரை நம் கல்விமுறைகள் எல்லாமே வாடிக்கையான கடமையாகவே இருக்கும்.
When management (but not all)learn to treat teachers as teachers all teachers will work effectively in school with full happiness
ReplyDeleteteachers without bed than athigam bed erunthalum sari ellainalum same salarithan bed ku mathippe ellai. padikkaatha students 10th 12th privatethan exam eluthanum school studenta elutha mudiyathu.
ReplyDeleteOk
ReplyDelete