பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி
இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி
ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படு வார்கள்
என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
மேலும், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள்,
பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும்
மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில்
காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும்,
அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி
ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன.
இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பி்ற்பகல் வெளியிடப்படும்
என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை
தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு,
வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.
antha posts ellame science ha irukkanum
ReplyDeleteTrb ill money r b
ReplyDeletewhen will PG list be published. TRB announced two weeks before. But there is nothing. All are eagerly waiting for the same? we cannot contact them too....I request padasalai to take the matter to Trb or any press to speed up the process. We are economically and mentally worrried much. we neither go to job nor wait patiently for the list. who will help us? only GOD
ReplyDelete