Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது

           உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தற்போது பயப்பிடும் விடையம் இதுதான். "எபொல்லா" வைரஸ். இந்த வைரஸ் 1976ம் ஆண்டு முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரசை கட்டு படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்சை விட 50 மடங்கு போராபத்து தரகூடிய வைரஸ் ஆகும். 1976ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியவேளை தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள்.
 
           இதன் பின்னரே இதனை பரவிடாமல் தடுத்து, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது தெரியவில்லை. அதாவது இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால், அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் இறப்பார்.
அப்படி என்றால் இந்த வைரஸ் தாக்கிய நபர்கள் அல்லது அனைத்து விலங்குகளும் இறந்திருக்கவேண்டும் அல்லவா ? இப்போது எப்படி மீண்டும் அந்த வைரஸ் உயிர் பெற்றது என்று மருத்துவர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். இது பறவையில் இருந்து தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலின் ஆபிரிக்க நாடான நையீரியாவில் தான் இதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இதுவரை 670 பேரை இந்த வைரஸ் பலிவாங்கியுள்ளது. இது இவ்வாறு இருக்க இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது. இன்றைய தினம் ஹாங்காகில் இன் நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இனி அவர் யார் யாருடன் பழகினார் என பார்த்து அவர்களையும் தனிமை படுத்தவேண்டும்.
இன்னும் சில திங்களில் இது சுமார் 30,000 பேருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, இன்று பாதுகாப்பு சபையைக் கூட்டி, இன் நோய் பிரித்தானியாவை தாக்கினால் என்ன செய்வது என்று ஆராய்ந்துள்ளது. உலகில் உள்ள மக்கள் பலர் தமது விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வைரஸ் படு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுவந்தவர்களோடு பழகுவதை, உடனடியாக குறைப்பது நல்லது. நையீரியா நாட்டோடு அனைத்து எல்லைகளையும் அண்டைய நாடுகள் கலவரையறை இன்றி மூடியுள்ளார்கள். ஆனால் அதற்கு முன்னரே இந்த நோய் பல நாடுகளுக்கு பரவி விட்டது.
இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மிகவும் கேவலமான முறையில் இறக்கிறார்கள். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. முக்கிய நரம்புகளை தாக்கி கோரையாக்கி, வெளிப்புற தோலில் கோரைகளை (ஓட்டைகளை) உண்டாக்குகிறது. காச்சல் வாந்தி போன்ற அறிகுறிகள் உடனே இருக்கும். தோல் பழுதடைந்து சதைகள் தொங்கிப்போய், வயதானவர்கள் போல நாம் மாறி பின்னரே இறப்போம் !
தமிழகத்தில் புகுந்தது எபோலா ! சுகாதார துறை அலர்ட் ஆகுமா?
ஆப்ரிக்க நாடுகளை மிரட்டி வரும் எபோலா வைரஸ் நோய் பாதித்த ஒரு வாலிபர் தமிழகத்திற்கு வந்தார். பப்புவாகுனியாவில் இருந்து தமிழகம் வந்த இந்த 26 வயது வாலிபர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நபரை சென்னையில் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு தனி அறையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழகத்தில் முதன் முதலாக அறிகுறி காணப்படும் நபர் நைஜீரியாவில் இருந்து வந்திருப்பதால் சுகாதாரத்துறை அலர்ட் ஆகி உள்ளது. மேலும் இந்த நோய் பரவாமல் இருக்க முனனெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் புதிய எபபோலா நோய்க்கிருமி, ஆப்ரிக்க நாடுகளில் முதன் முதலாக பரவியது. குறிப்பாக நைஜீரியா, கென்யா, லைபீரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் இந்த நோய் பரவி வருகிறது. ஆப்ரிக்க நாடுகளில் 961 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் அவசரநிலை பிகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கத்தின் அறிகுறி, இருமல், காய்ச்சல் , தலைவலி, மேல்வலி இருக்கும். காயச்சல் பாதித்துள்ளவர்கள் உயிரிழக்க கூடும். சரிவர தடுப்பு மற்றும் நோய்க்குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. <>அவசர நிலை பிரகடனம் : இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எபாலா நோய் இல்லை, யாரும் பீதி அடைய வேண்டாம் என லோக்சபாவில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பப்புவாகுனியாவிலிருந்து சென்னை வந்த வாலிபருக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தெரு, குடுவாலைப்பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் ( 26 வயது) . எமிரேட்ஸ் விமானத்தில் பப்புவாகுனியாவில் இருந்து தமிழகம் திரும்பினார். அப்போது அவருக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜீவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பார்த்திபன். அங்கு நோய் பரவாவண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அவருக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive