தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிக்கான கலந்தாய்வு இன்று
தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தால்குரூப்-4 பணியில் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரை
வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (2013-14ம் ஆண்டு)
பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இதில்
காலிப்பணியிடங்களுக்கான முறையே மூன்றாம், இரண்டாம் மற்றும் முதலாம் கட்ட
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு இன்று
முதல் 23ம் தேதி வரை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை
அலுவலகத்தில் நடக்கிறது. காலை 8.30 மணியில் இருந்து கலந்தாய்வும், காலை 10
மணியிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...