Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்

          சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.

        ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ்முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் பேர் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.
1300 பணியிடங்கள்

           இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையானஉயர் பணிகளுக்காக பட்டதாரிகளை தேர்வு செய்வதற்கான முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. 1300 பணியிடங்களுக்கு இந்த தேர்வை எழுத 9 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

                   தமிழ்நாட்டில் தேர்வு எழுத சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 145 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சென்னையில் தேர்வு எழுத 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 30 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.கோவை, மதுரைஇது போல கோவையில் 22 மையங்களில் தேர்வு எழுத 10 ஆயிரத்து 345 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.. மதுரையில் 20 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 9 ஆயிரத்து 697 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 4 ஆயிரத்து 63 பேர் எழுதினார்கள். 5 ஆயிரத்து 634 பேர் வரவில்லை.இந்த தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் பி.இ. படித்த என்ஜினீயர்கள்தான். கலை அறிவியல் படித்தவர்கள் குறைவுதான். மேலும் தேர்வு எழுத வந்திருந்தவர்களில் பலர் பயிற்சி மையத்திற்கு செல்லாதவர்களே.பொது கல்வி தேர்வுநேற்று காலையில் 9–30 மணி முதல் 11–30 மணிவரை பொதுக்கல்வி தேர்வு நடைபெற்றது. இது 200 மதிப்பெண்களை கொண்டது. தேர்வு எழுதிவிட்டு வெளியேவந்த விக்னேஷ் என்ற மாணவர் கூறுகையில் நான் முதல் முதலாக சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி உள்ளேன். தேர்வு எளிது என்றும் கூறமுடியாது. கடினம் என்றும் கூற இயலாது என்றார்.

தூத்துக்குடியைச்சேர்ந்த நிரஞ்சனி என்ற பெண் கூறியதாவது:–நான் தூத்துக்குடி செயிண்ட்மேரீஸ் கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படித்தேன். நான் சென்னையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில்ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறேன். தேர்வு சற்று எளிதாகத்தான் இருந்தது. ஆனால் மதியம் நடைபெற உள்ள சிசாட் தேர்வில், ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்க தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்ஜினீயரிங் படித்தவர்கள் கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிப்பார்கள். என்னைப்போன்ற கலை அறிவியல் படிப்பில் விலங்கியல் படித்தவர்களுக்கு சிசாட் தேர்வுஎளிது அல்ல.இவ்வாறு அந்த மாணவி தெரிவித்தார்.சிசாட் தேர்வுபிற்பகலில் 2 மணிமுதல் 4 மணிவரை சிசாட் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வு 200 மதிப்பெண்களை கொண்டது. ஆனால் மொத்த கேள்விகள் 80 மட்டுமே. ஒவ்வொரு கேள்விக்கும் தலா 2½ மதிப்பெண். தவறான பதில் அளித்தால் மதிப்பெண் (மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்) கழிக்கப்படும். ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கத்தேவை இல்லை. இதை மத்திய அரசும் யு.பி.எஸ்.சி. நிறுவனமும் அறிவித்தது. மற்ற கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும். ஆங்கிலத்தில் இருக்கும்.தேர்வுமுடிந்து வெளியே வந்த மாணவிகள் தேனியைச்சேர்ந்த பிரியங்கா, நெய்வேலியைச்சேர்ந்த அறிவொளி, புதுச்சேரியை சேர்ந்த ஜனனி ஆகியோர் கூறியதாவது:–சிசாட் தேர்வு எளிதாகவே இருந்தது. எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்று நம்புகிறோம். பதில் தவறாக அளித்தால் மைனஸ் மதிப்பெண் உண்டு என்பதால் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தோம் என்றனர்.

ஆய்வுக்கு பின் அனுமதி

தேர்வு மையங்களில் கடந்த வருடங்களைவிட இந்த வருடம் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தேர்வர்கள் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களும் செல்போன் வைத்திருக்கிறார்களா என்று சோதனை போடப்பட்டபின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் என்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டதற்கு 50 சதவீதத்திற்கு மேல் தேர்வு எழுத வரவில்லை என்று பதில் அளித்தார். சென்னையில் தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், இணை இயக்குனர்கள் ராஜராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive