மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி
நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 5 நாள் இன்ஸ்பயர் அறிவியல்
முகாமை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை ஆலோசகர் பிகரஸ்பதி
தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:உலக அளவில் அமெரிக்காவில்
தான் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதிக அளவில் உள்ளனர்.
இதில்
சீனா 2ம் இடத்தில் உள்ளது. இந்தியா 9வது இடத்தில்தான் உள்ளது. நம் நாட்டில்
1.7 லட்சம் பேர் மட்டுமே ஆராய்ச்சி பணியில் உள்ளனர். மருத்துவம்,
இன்ஜினியரிங் கல்வியில் உள்ள ஆர்வத்தைவிட அறிவியல் துறையில் ஆர்வம்
குறைவாகவே இருந்து வந்தது. எனவே, அறிவியல் விஞ்ஞானிகளை அதிக அளவில்
உருவாக்க கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசு இன்ஸ்பயர் விருது திட்டத்தை
கொண்டு வந்தது.
இத்திட்டப்படி 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் பிஎச்டி படிக்கும்
மாணவர்கள் வரை அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும்
ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு விருது மற்றும் நிதி உதவி அளித்து, அவர்களது
கல்வி கட்டங்களை 5 வகையாக பிரித்து ஆராய்ச்சிக்கு உதவ
ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஸீ250 கோடி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 1,350 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளது.பிஎஸ்சி மற்றும் எம்எஸ்சி பயில்பவர்களுக்கு மாதம்தோறும்
5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டமும் உள்ளது. இந்த விருதுகளை பெற
போட்டி தேர்வு எதுவும் தேவை இல்லை. அவர்களது முந்தைய கல்வியில் டாப்1
இடத்தை பெற்று இருந்தால் போதும். பிஎச்டி முடித்தவர்கள் உதவிபேராசிரியர்
களாக பணியாற்றவும் இத்திட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...