தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம்
2142 உதவி மருத்துவர் (அசிஸ்டென்ட் சர்ஜன்&பொது), 34 உதவி மருத்துவர்
(அசிஸ்டென்ட் சர்ஜன்&டென்டல்) ஆகிய மொத்தம் 2176 உதவி மருத்துவர்
பணியிடங்களுக்கு போட்டி எழுத்து தேர்வு மூலம் தற்காலிக அடிப்படையில் ஆட்களை
தேர்வு செய்ய உள்ளது.
இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
வரும் செப்டம்பர் 1ம் தேதியாகும். விண்ணப்ப கட்டணம் வங்கி வழியாக
செப்டம்பர் 3ம் தேதி வரை செலுத்தலாம். ஓசிஆர் முறையில் போட்டி தேர்வு
செப்டம்பர் 28ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை சென்னையில்
நடைபெறும்.
வயது வரம்பு குறைந்தபட்சம் 18. அதிகபட்ச
வயது வரம்பு எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இல்லை. மற்றவர்களுக்கு பொது
மருத்துவத்திற்கு 35ம், பல் மருத்துவத்திற்கு 30 வயதும் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ரூ.375 ஆகும். மற்றவர்களுக்கு ரூ.750 ஆகும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...