அடுத்த ஆண்டு, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை எழுத உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்
குறித்த கணக்கெடுப்பு பணியை, அடுத்த மாதம் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு
செய்துள்ளது. 20 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த இரு பொதுத் தேர்வு களையும், 18 லட்சம் பேர்
எழுதினர். இந்நிலை யில், 2015ம் ஆண்டு, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்
தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர் விவரம் குறித்த கணக்கெடுப்பு பணியை அடுத்த
மாதம் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி ஆண்டு துவங்கிய
பின், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என, மூன்று மாதங்கள் வரை, மாணவர் சேர்க்கை
அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, இம்மாதம் இறுதிவரை, மாணவர் சேர்க்கைக்கு,
கால அவகாசம் உள்ளது. அதனால், செப்டம்பர் மாதம், பொதுத் தேர்வு எழுத உள்ள
மாணவர்கள் விவரங்களை, தேர்வுத்துறை சேகரிக்க உள்ளது.
கடந்த ஆண்டில், மாணவர் விவரங்களை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப, 14 வகை
விவரங்கள் அடங்கிய படிவத்தை தயார் செய்து, பள்ளிகளுக்கு வழங்கி,
அதன்அடிப்படையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலை, தேர்வுத்துறை
தயாரித்தது. அப்படியிருந்தும், படிவத்தில் உள்ள தகவல்களை, ஆசிரியர் சரியாக
கவனிக்காததால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண்
சான்றிதழில், பிழைகள் ஏற்பட்டன. இதை சரி செய்து, தேர்வுத்துறை, புதிய
மதிப்பெண் சான்றிதழை வழங்கியது. இதேபோன்ற பிரச்னை, வரும் ஆண்டில் ஏற்படக்
கூடாது என்பதில், தேர்வுத் துறை உறுதியாக உள்ளது. எனவே, பள்ளி ஆசிரியர்கள்
மத்தியில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரம், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு, பொதுத்தேர்வு படிவத்தை தவறில்லாமல்
பூர்த்தி செய்வது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், விளக்கினார்.
கணக்கெடுப்பு :
தேவராஜன் கூறுகையில், ''வரும் ஆண்டில், பிழையில்லாத பட்டி யலை தயாரிக்க
வேண்டும் என, திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளை இப்போதே
22துவக்கியுள்ளோம். செப்டம்பரில், கணக்கெடுப்பு பணி துவங்கும்,''
என்றார்.வரும் ஆண்டில், இரு தேர்வுகளையும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...