செப்டம்பர் - அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. 'மாணவர்கள், வரும்
7ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு சென்று, பெயரை
பதிவு செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை, www.tndge.in
என்ற இணையதளத்தில் காணலாம். மாணவர்கள், வரும் 7ம் தேதி முதல் 14ம் தேதி
வரை, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று, பெயரை பதிவு செய்யலாம். தேர்வு
கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ரொக்கமாக, சம்பந்தப்பட்ட மையங்களில்
செலுத்த வேண்டும். பார்வையற்றவர்கள், இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.
இணையதளத்தில் பதிவு செய்தபின், மாணவர்களுக்கு, ஒப்புகைச் சீட்டு
(அக்னாலெட்ஜ்மென்ட் கார்டு) வழங்கப்படும். இதில் உள்ள விண்ணப்ப எண்ணை
பயன்படுத்தி, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, இந்த
ஒப்புகைச் சீட்டை, பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, தேர்வுத்
துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...