Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்.!?

       தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
 
      கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
      இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.
 
        இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் (எஸ். இ.எம்.அய்.எஸ்) மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17 ஆயிரம் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
 
     கடந்த 2011 -2012ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள் இயங்கின.அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338 ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் பயிலுகின்றனர். தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.அய்.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்ட தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் மலைப்பிரதேசம், எல்லை யோரம் போன்ற பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
 
        இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும் அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களை கொண்டே இவை இயங்குகின்றன.
 
        இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியது: தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது.
 
          ஆனால் 2 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோ சென்று விட்டால், ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப்படி, குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரி யருக்கு மேல் நியமிக்க முடியாது என்று விதி உள்ளதே இதற்கு காரணம். இது போன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.




2 Comments:

  1. அரசாங்கம் மற்ற அனாவசிய செலவுகளைஊம், இலவசங்களைஊம் குறைத்து இந்த அடிப்படை தேவைக்கு பயன்படுத்தலாமே.
    மூன்று ஆசிரியர்களை நியமித்தோ அல்லது பணி நியமனம் செய்தது போக மீதி உள்ள டிஇடி இல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை
    அடுத்த வருடம் காலி பணிஇடம் வரும் வரை அவர்களை அரை சம்பளத்திற்கோ கூட பணி அமர்த்தலாமே, நாட்டின் எதிர் காலம் ஒவ்வொரு வகுப்பறையில் தான் தொடங்குகிறது என்பதை உணர்ந்து அதற்கான செலவீனங்களுக்கு தயங்காமல் முடிவெடுத்தால் ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் .

    ReplyDelete

  2. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள்...
    Posted: 12 Aug 2014 05:47 AM PDT
    தற்போது வெளியிட்டுள்ள தாள் 2 க்கான தேர்வு பட்டியலில் தேர்வானவர்களில்,நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது.

    எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின்
    பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

    இல்லை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி முடித்து விட்டு,தாள் 1 க்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?

    மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதிதேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள் அறிவிப்பார்களா?அப்படி அறிவிக்கும் போது பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இது பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தொலை பேசி எண்களுக்குதொடர்பு கொண்டு கேட்டதற்க்கு, நீங்கள் முதல் தாளில் தேர்வுபெற்றுள்ளீர்களா இல்லைஇரண்டாம் தாளில் தேர்வு பெற்றுள்ளீர்களா என்றுஎங்களுக்கு எப்படி தெரியும் என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்.

    அப்படியே ஒருவர் இரு தாள்களிலும் தேர்வு பெற்று இரண்டாம் தாளுக்குறியபட்டாதாரி ஆசிரியர் பணியிடத்தை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யும்போது அவருடைய பெயர் முதல் தாளுக்கான தேர்வு பட்டியலிலிருந்துநீக்கப்படுமா?

    இல்லை அவர்களின் பெயர்கள் முதல் தாளுக்கான தேர்வு பட்டியலில் நீட்டிக்கப்படும் போது இடைநிலை ஆசிரிய பட்டய படிப்பு முடித்து, ஆசிரியர் தகுதிதேர்விலும் தேர்வு பெற்று காத்திருக்கும் எங்களை போன்றோரின் பணி வாய்ப்புபறிக்கப்படும்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிடும் முன்பு இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இடை நிலைஆசிரிய பணிக்காக காத்திருக்கும் எங்களின் உரிமை காக்கப்படும்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பிரச்சனையில் தலையிட்டு ஒரு நல்ல முடிவினை பெற்று தர வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive