Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார் - தினமலர்

                ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

             தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி
 
            நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது. அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
 
               எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
 
            2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள், 2,000 பேரின், தேர்வு பட்டியல், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது




35 Comments:

  1. Best of luck to selected teachers!

    ReplyDelete
  2. Within this month posting confirm

    ReplyDelete
  3. With in two days 1st papar Result may be be Publish so Dont,'wary Selected candidate and porattathipatthi endha kavaluim venam yestarday Education secratary ivangali Lift and Right vaangittingalam innaikkulla neenga porattatha kaivedalana FIR Pottiruvangana solliyum, Next TET ippo porattam ponnum candidate Life la Eluthavidamtten warning pandiyum,government mela avathrun solli entha porattam nadattakudathunnu warning panni anuppkiranga friends please don't go to Porattam nadakkum placekku please.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. Kandippa next list with in Two monthkulla varumam 100% true naan trb kku poi ketten kandippa varthu sir konjam wait pannunga sirnnu sollirukkanga so namba wait pannuvom kandippa all subjectlum minumum 500 above varum innum 2 Mark varai iranga vaippullathu yarum intha time pass kottathukku pogathinga please.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Suresh next list paper 1 or paper 2? Konjam sollunga sir

      Delete
  5. paper 1 bc candidates 76 to72 varai ullavarkal thodarbu kollavum. namathu velai nammai vittu sella pogirathu.ithu than kadaisi vaippu call me 8012482604

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. yan sir neenga pana poringa nu solunga............am also 75

      Delete
  7. Hai Friends nall yochiuparunga intha porattam pannum team la enna korikkai vaithuulannu totala 40 peru than irukkanga avanga 40 perumemay aall,aallukku oru korikkai vaitthal government enna seiyum.first neenga kelunga ethukkagappa intha 4 days porrattam pannringannu evanukkum thiriyathu yenna avangathan 40 perum ovvanna sollurangale.

    ReplyDelete
    Replies
    1. பேப்பர் 1 நண்பர்களுக்கு வணக்கம். நாமும் மிகப்பெரிய அளவில் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டியது நமது கடமை . 33000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளோம் ஆனால் காலிபணியிடமோ வெரும் 1675 மட்டும் தான். தாள் 2 ஐ விட நாம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். நாமும் வழக்கு தொடர வேண்டியது கட்டாயமாகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நமெக்கென்ன என்று சுயநலமாக இல்லாமல், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வழக்கு தொடர வேண்டியது கட்டாயம். அனைவரும் சென்னை வாரீர். வழக்கு சம்பந்தமான உதவிகளுக்கு அழைக்கவும்.
      கா
      98433 11339
      98437 34462
      99443 58034

      Delete
  8. pass panniyavarkalil 65 percentage bc.but vacanciel 297 idankal othukkuvathu niyama.pls pls call me paper1 72 to 76 varai ulla bc community.8012482604

    ReplyDelete
  9. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தகுதித் தேர்வுக்கு தனி பணிநியமன பட்டியல் வெளியிட தமிழக முதல்வர் பரிசீலிப்பாரா?

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. Ammavukuu engal manamarndha nandriyai therivithu kolgirom...

    ReplyDelete
  13. This TEACHERS DAY will the the maiden teachers day for the SELECTED CANDIDATES as GOVT TEACHERS;;;;;;;;

    ReplyDelete
  14. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து மற்ற வலைத்தளங்களை போல இந்த பாடசாலை வலைதளத்தையும் தரமற்றதாக பயன்படுத்தாதீர்கள் ,தரமற்ற கமெண்ட் போடாதீர்கள் . ஏன் என்றால் இந்த வலைதளத்தை பள்ளி ஆசிரியர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரும் படித்து வருகின்றனர் ,உங்களுடைய தரமற்ற கம்மேன்ட்களால் மாணவர்களின் நலன் பாதிப்படையும் ,அதனால் இந்த வலைதளத்தை படிக்கும் மானவர்களுக்காவும் ,பயனுள்ள தகவுளுக்காவும் மட்டும் பயன்படுத்தவும் கூறியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. தவறிருந்தால் மன்னிக்கவும் என்று கூறியதால் நீங்கள் தப்பித்தீர்கள்.இல்லையென்றால்உங்களையும் திட்டி தீர்த்திருப்பார்கள் ...

      Delete
    2. எந்த ஒரு நல்ல ஆசிரியரும் தவறான வார்த்தைகளை ஒருபோதும் உபயோகிக்க மாட்டார்கள்

      Delete
  15. பனி நியமனம் பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்கள் சார்பில் மாண்புமிகுபுரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  16. FLASH NEWS !!

    Aug 22, 2014 10:00 Am

    TET:போராட்டம் நடத்தியோர் கைது.

    ReplyDelete
  17. நேர்மறையாக செயல்படும் தமிழக அரசிற்கு நன்றி

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. Anybody can know that when will publish the final list for pg assistant candidate who belongs to commerce, economics and physics?

    ReplyDelete
  21. Posting podunga mam al student for waiting... 3month complete

    ReplyDelete
  22. Apo idhuku munnadi select Pana candidates Ku velai kedaiyadha case ena aga podhu...

    ReplyDelete
  23. Apo idhuku munnadi vitta selection list La ullavanglku velai kedaiyadha,...

    ReplyDelete
  24. What about already selected candidate s no job a

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive