பொறியியல் பணிக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வில் (2009&13ல் அடங்கிய பதவி)
நேரடி நியமனம் செய்யும் பொருட்டு டி.என்.பி.எஸ்.சி. சார்பில்
எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி நடந்தது. கடந்த ஜூலை 22ம்
தேதி முதல் 25ம் தேதி வரையும் மற்றும் 28ம் தேதியும் நேர்காணல் நடந்தது.
எழுத்து, நேர்காணல் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய
பட்டியல் கடந்த 30ம் தேதியும், தர வரிசைப்பட்டியல் 1ம் தேதியும்
வெளியிடப்பட்டது.கட்டுமான பொறியியல் (சிவில்) பிரிவிற்கான தர
வரிசைப்பட்டியலில் 325 விண்ணப்பதாரரும், கட்டுமான பொறியியல் அல்லாதோருக்கான
தர வரிசைப்பட்டியலில் 104 விண்ணப்ப தாரரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. கலந்தாய்வு
நடக்கும் நேரம் உள்ளிட்ட பிற விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதம் தனித்தனியாக
விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு வருகை தர தவறும் பட்சத்தில் கலந்தாய்வில் பங்கேற்க மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...