''கடந்த கல்வி ஆண்டில் உருவான, 1,112 கல்லூரி உதவிப் பேராசிரியர்
பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்,'' என, முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில், 10 ஏக்கரில், கல்வியியல் வளாகம், நிர்வாக வளாகம் ஆகியவை, 95 கோடி ரூபாயில் கட்டப்படும்.மயிலாடுதுறை, மணல்மேடு பகுதியில், இரு பாலர் பயிலும், அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்படும்.சென்னை அண்ணா பல்கலை முதன்மை வளாகத்தில், இளம் நிலை மாணவ, மாணவியர் விடுதி, சென்னை பொறியியல் கல்லூரி நிர்வாக வளாகம், அக்கல்லூரி மாணவர் விடுதி ஆகியவை, 30.70 கோடி ரூபாயில் கட்டப்படும்.கடந்த 2013 - 14ல், பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றால், அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் ஏற்பட்டுள்ள, 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.தமிழகத்தின், 13 பல்கலைக்கழங்கள், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் பாடப் பொருள்கள் ஆகியவை இணைய தளம் மூலம் இணைக்கப்படும்.இதற்காக, அண்ணா பல்கலை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், மின் தொடர்பு நூலக களஞ்சியங்கள், இணைய தள வசதியுடன் அமைக்கப்படும்.பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகள், இந்த இணைய தளத்துடன் இணைக்கப்படும். மின் நூல்கள், இதழ்கள், ஒளிப் படங்களை, இதன்மூலம் பதவிறக்கம் செய்யலாம். இத்திட்டம், 1.86 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர்அறிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...