தமிழகம் முழுவதும், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொது நூலகங்கள்,
நகர்ப்புற மற்றம் ஊர்ப்புற பகுதி களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த
நூலகங்கள் தொடர்பான தணிக்கை, சென்னை பொது நூலக இயக்குனரகம் மற்றும், 32
மாவட்டங்களில், மாதிரி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நான்கு மாவட்ட நூலக
அலுவலகங்களிலும், 2010 - 13ம் ஆண்டிற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
சென்னை
மாநகராட்சி, 2008 முதல், 2013 வரை, 53.43 கோடி ரூபாய் மேல் வரியை
வசூலித்தது. இந்த தொகையை, சென்னை மாவட்ட நூலக அதிகாரியிடம் அளிக்கவில்லை.
மாவட்ட
வாரியான நூலக உறுப்பினர்கள், அம்மாவட்ட எழுத்தறிவு பெற்றவர்களை ஒப்பீடு
செய்ததில், அரிய லூர், கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை,
புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம்
மாவட்டங்களில், எழுத்தறிவு பெற்றவர்களை விட, நூலக உறுப்பினர்கள், 10
சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், நடமாடும்
நூலகம் செயல்படாமல் இருந்தது. சோதனை செய்யப்பட்ட, 35 கிளை நூலகங்களில்
மூன்றில், நூலக கட்ட டங்கள் பாழடைந்த நிலையில், நூலகப் பணியாளர்கள்,
பார்வையாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்தன.
தணிக்கை
செய்யப்பட்ட நூலகங்களில், 32 நூலகங்களில் இடப்பற்றாக்குறை, இருந்ததுடன்,
பார்வையாளர்கள், பணியாளர்களுக்ான கழிப்பறை வசதிகள் இல்லை.
பொது
நூலகங்கள் இயக்குனர், மாவட்ட நூலக அலுவலர், நூலகர், பதிவு எழுத்தர் மற்றும்
காவலாளி ஆகிய பணியிடங்கள் பெரிய அளவில் காலியாக இருந்தன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...