10, 12ம் வகுப்பு மாணவர்களின் உண்மை யான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில்
காலாண்டு தேர்வினை முழு ஆண்டு தேர்வு போல நடத்த வேண்டும் என கல்வித்துறை
அறிவுறுத்தியுள் ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பிற்குசெப்.17ம் தேதி முதல்
26ம் தேதி வரை தேர்வு நடைபெறும். பிளஸ்2 வகுப்புகளுக்கு செப்.15ல் துவங்கி
செப். 26ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் இத்தேர்வை ஆண்டிறுதி தேர்வு
போல் நடத்த வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒரு அறைக்கு 20
மாணவ, மாணவியர் வீதம் தேர்வெழுத தேர்வறையை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வறை
ஒன்றுக்கு ஒரு அறை கண்காணிப்பாளர்வீதம் நியமனம் செய்யப்பட வேண்டும்.
எந்த பாடத்திற்கு தேர்வு நடைபெறுகிறதோ? அந்த பாட ஆசிரியர்களை அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.அரசு பொதுத்தேர்வு போல, மாணவர்களின் உண்மையான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பாட தேர்வுகள் முடிந்த உடன் விடைத்தாள்களை 3 நாட்களுக்குள் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டின் அடிப்படையில் திருத்திட வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை உடனடியாக மாணவர்களிடம் அளித்து சரிபார்த்த பின்னர் மாணவர்களின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பள்ளியில் ஒவ்வொரு பிரிவிலும் 100 முதல் 110 மாணவர்கள் உள்ளனர். இவர்களை ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் அமர செய்வது எப்படி? மொத்தம் 5 பிரிவுகள் உள்ளன. ஏறக்குறைய 25 ஆசிரியர்கள் தேவை. மற்ற மாணவர்களை யார் பார்த்துக்கொள்வது?
ReplyDeleteவிழுப்புரம் மாவட்ட CEO வேறொரு பாடத்திட்டத்தை கொடுத்து மாதத்தேர்வு நடத்தினார்.ஆனால் இப்போது பள்ளிகல்விதுறையின் பாடத்திட்டத்தை பயன்படுத்தி காலாண்டு தேர்வு எழுத வேண்டும். இந்த சூழ்நிலையில் மாணவர்கள் எவ்வாறு தேர்வை சிறப்பாக எழுதமுடியும்?
அளவுக்கு அதிகமான மாணவர்களை ஒரு வகுப்பில் அடைத்துவைத்து கொடுமைபடுத்தி அவர்கள் அறிவு ஆற்றலை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும் மனித உரிமை மீறல்களை கட்டுபடுத்துவது யார் பொறுப்பு?