ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம்
தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள்
மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43
ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு
வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக
குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன்
செல்லலாம்.
பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி.
மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய்
அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்
சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்
அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.
திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த
மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர்
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண்
அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல்
ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்:
1. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
2. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
seniorityக்கு மதிப்பெண் வழங்காத weightageமுறையையே இரத்து செய்ய தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ReplyDelete2013-14 vacancy evlo atha pathi antha newsum illa athilavathu vacancy increase aaguma
ReplyDeleteவெய்டேஜ்
ReplyDeleteசரிபார்ப்பில்....பி.லிட்.பி எட்
க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட்
சேர்த்துக் கொள்ளப்படுகிறது... detail
http://
www.theinbornteachers.blogspot.in/