Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Pass செய்ய 55 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி!

           ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும் : ஜெயலலிதா அறிவிப்பு


        சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:–ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ – மாணவியர்கள் தொழில் நுட்பக் கல்வி பயில ஏதுவாக, கடலூர் மாவட்டம், நந்தனார் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப் பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு தொழில் நுட்பக் கல்லூரிகள் 24 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2) 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியர்கள் தொழிற் பயிற்சி பெற ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப் பேட்டை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3) ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு, சரி விகித உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையிலும், 150 மாணாக்கர்களுக்கு மேல் தங்கியுள்ள 200 விடுதிகளுக்கு 8 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப்பள்ளிகளில், தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் இட்லி தயாரித்து வழங்கும் வகையில், 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 1,577நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

5) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6) மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைவருக்கும் 2 கோடி ரூபாய் செலவில் தலா ஒரு ரெயின் கோட்டும், குளிர் காலங்களில் மாணவ, மாணவியரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

7) தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால் 2014–-2015 ஆம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய எட்டு மாவட்டங்களில் தலாஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில், பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு விடுதிக்கு ஆண்டொன்றுக்கு 15,000- ரூபாய் வீதம் 1647 விடுதிகளுக்கு 2 கோடியே47 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

9) பி.எட். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




14 Comments:

  1. Give job for all tntet passed candidates. Afterwards give coaching for others.

    ReplyDelete
  2. To get votes in elections government announced the relaxation of five percentage. Why this not happened in 2011-12.

    ReplyDelete
  3. First tet pass pannavangaluku job podunga then give coaching to others

    ReplyDelete
  4. Tet Final list will publish after 12Aug only its conform news

    ReplyDelete
  5. My Relative work CEO office

    ReplyDelete
  6. please Don't discriminate tet passed teachers

    ReplyDelete
  7. Late aagum endral posting increase aaga vaaippu irukka Sir ?

    ReplyDelete
  8. Coaching ethuku..... Eppadi kastapadanumtu sollitharava.... naam padum kastam pothathentru. Coaching koduthu kastapadutha venduma

    ReplyDelete
  9. even they make everyone to get pass mark bt wat abt the job confirmstion

    ReplyDelete
  10. Ennathan selavu panni pass aga veithalum job conform panna mattanga boss. Ethuthan namma amma style

    ReplyDelete
  11. இனி என்ன சொல்ல போகிறார்கள் ???

    முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ?


    *ஜூலை 3 & 4ஆம் தேதிகளில் 
    முதுகலை ஆசிரியர் தேர்வு வழக்குகள் 
    முடிந்து
    தீர்ப்புகளும் வழங்கப்பட்டது. *

    *அவசரஅவசரமாக தீர்ப்புகள் வெளியிடப்பட்டதை பார்த்த போது 
    ஏதோ உடனே இறுதி பட்டியல்வெளியிடப்படும்  என்று பத்திரிகைகளில்செய்திகள்  வெளியாகின.*

    * ஜூலை 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால்  அவர்கள் ்
    இந்த மாதம் இறுதியில் முதுகலை
    ஆசிரியர் தேர்வு இறுதி  பட்டியல்
    வெளியிடப்படும் என்று  கூறினர். *

    * வந்து விட்டது அவர்கள்  கூறிய ஜூலைமாதம் இறுதி *

    * இனி என்ன சொல்ல  போகிறார்கள் ...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive