Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

GROUP-IIA தேர்வு - விடை காணா வினாக்கள்-விழி பிதுங்கும் தேர்வர்கள்:

          நடந்து முடிந்த TNPSC GROUP II A தேர்வுக்கான உத்தேச விடைகளை பொதுத்தமிழுக்கு மட்டும் விடியல் பயிற்சி மையம் வெளியிட்டிருந்தது. அந்த விடைகள் TNPSC வெளியிட்ட விடைகளுடன் 100 சதவீதம் பொருந்தியிருந்தது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதர அலுவல்கள் காரணமாக பொது அறிவு வினாக்களுக்கான விடைகளை வெளியிட இயலவில்லை.


               அந்த தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் சிலவற்றைப் பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்துள்ளன. ஆனாலும் அக்கேள்விகளில் விடை காணா வினாக்கள் சில இருந்ததைப் பற்றியும் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படுமா என்பது பற்றியும் பல நண்பர்கள் கேட்டிருந்தனர். இனி அவற்றைப் பற்றி...
வினா எண் 1.
பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்க: எனக் கூறி இணைகளைக் குறிப்பிட்டு அதில் எந்த இணை சரி என கேட்கப்பட்டிருந்த கேள்வியில்
I . சுவாமி விவேகானந்தர்- 1893ம் ஆண்டு சிகாகோ சமய பாராளுமன்றம் என்ற இணையே சரியானது. ஆனால் அதற்கு II . எம்.எஸ்.சுப்புலட்சுமி-என்ற விடை தரப்பட்டது அபத்தம்.
வினா எண் 2.
எந்த நூல் ஒட்டக்கூத்தர் எழுதியது அல்ல? என்ற கேள்விக்கு
B )சரஸ்வதி அந்தாதி . C ) யாப்பருங்கலம் என இரு விடைகள் பொருந்தி வருகின்றன. ஆனால் C மட்டுமே விடையாக தரப்பட்டுள்ளது. இதில் யாப்பருங்கலம் அமிதசாகரராலும், சரஸ்வதி அந்தாதி கம்பராலும் எழுதப்பட்ட நூல்கள் ஆகும் .( காண்க : சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகம் பக்கம் எண் 65.)
வினா எண் 3.
2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாநில மக்கள் தொகையினை பொருத்தக் கேட்டிருந்தார்கள். அதில் 3 1 4 2 எனப் பொருத்துவதே சரியான விடையாகும். ஆனால் அத்தகைய OPTION எதுவும் விடையில் இல்லை . ( சரியான விடைக்கு காண்க : சுரா இயர் புக் 2013. பக்கம் 539). இதுவும் கூட PROVISIONAL POPULATION அடிப்படையில் பார்த்தால் மட்டுமே சரியாக வரும். FINAL POPULATION DATA படி பார்த்தால் ஒன்று கூட பொருந்தவில்லை.
வினா எண் 4.
பொதுத் தமிழில் இடம் பெற்றிருந்த "He is Prince among the Tamil poets" என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் யார்? என்ற கேள்விக்கு பதில் திருத்தக்கத்தேவர் தான் என்றாலும் கேள்வியே தவறு என்ற வாதத்துக்கும் ஆதாரம் உள்ளது.
"தமிழ்க் கவிஞர்களின் இளவரசன் " என்று திருத்தக்கதேவரை வீரமாமுனிவர் பாராட்டினார் என முனைவர்.திரு.சி. பாலசுப்ரமணியனின் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் பக்கம் எண் 145ல் உள்ளபோதிலும் , முனைவர்.திருமதி. அ .ஜெயம் & சந்திரலேகா வைத்தியநாதன் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் பக்கம் எண் 169 மற்றும் முனைவர் தேவிரா.வின் புத்தகத்திலும் ஜி.யூ.போப் பாராட்டினார் என்றே உள்ளன.
வினா எண் 5.
சிறுகதைகள் - ஆசிரியர்கள் குறித்த சரியான இணை காணும் கேள்வியில் துடிப்பு-கோமகன் என்பது கோமகள் என்றே இருக்கவேண்டும் . இது மிகவும் ஆழ்ந்த அளவில் கேட்கப்பட்ட வினாவாகும். இதற்கான விடை தேடி புரட்டியபோது அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்ட மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 106 என்ற பட்டியல் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
வினா எண் 6.
1923ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பிறகு யார் சென்னை மாகாண முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்? என்ற கேள்விக்கு TNPSC யால் தரப்பட்ட விடை ராமராயநிங்கர் என்பது சரியே. ஆனால் இதற்கு சமச்சீர் கல்வி புத்தகத்தில் டி.என்.சிவஞானம்பிள்ளை என அச்சிடப்பட்டுள்ளது. இது சமச்சீர் கல்வி புத்தகத்தின் தவறேயாகும். அதை வைத்து சிலர் அந்த விடையை தேர்வு செய்துவிட்டார்கள். உண்மையில் டி.என்.சிவஞானம்பிள்ளை எந்த காலத்திலும் முதல் மந்திரி பதவி வகித்தவர் அல்லர். அவர் வளர்ச்சித்துறை அமைச்சராக மட்டுமே பணியாற்றினார் .
வினா எண் 7.
IGOANPS பற்றிய STATEMENT கேள்வியில் SPELLING தவறு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அது IGNOAPS (Indhira Gandhi National Old Age Pension Scheme) என்றே இருந்திருக்கவேண்டும். இதைப் படித்த பலரும் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
இவ்வாறு இரு விடைகள் பொருந்தும் வகையிலும் விடையே இல்லாமலும் உள்ள கேள்விகளுக்கு தேர்வு எழுதிய அனைவருக்குமே மதிப்பெண் தரும் முறையை TRB பின்பற்றுகிறது. ஆனால் அத்தகைய கேள்விகளுக்கு TNPSC மதிப்பெண் தருவதில்லை என்பதே நாம் அறிந்தவரை கிடைத்த தகவல். இதுபோன்ற வினாக்களை நீக்கிவிட்டு எஞ்சிய வினாக்களே மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதனால் சரியாக விடை அளித்தோரும் இதில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது வருந்தத்தக்கதே .
எனவே தவறான வினாக்களை நீக்கிவிடாமல் அனைவருக்கும் மதிப்பெண் தந்தால் அதனை வரவேற்கலாம். அத்துடன் இனியாவது இதுபோன்ற தவறுகளை குறைத்திடவோ இல்லாமல் ஆக்கவோ தேர்வாணையம் முயற்சிக்கவேண்டும். அதுவே ஒரு அரசியலமைப்புச் சட்ட அமைப்புக்கு அழகு சேர்க்கும்.
குறிப்பு:
சர்ச்சைக்குரிய மேற்குறிப்பிட்ட வினாக்களைக் குறிப்பிட்டு தக்க ஆதாரங்களுடன் எமது விடியல் மாணவர்கள் REPRESENTATION அனுப்பியுள்ளனர் என்பதை உங்களுக்கு அறிய தருகிறோம்.
நன்றி விடியல் பயிற்சி மையம் -வேலூர் 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive