புதுடெல்லி, ஜூலை 9- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
'புதிய சுதந்திரமான லோக்பால் சட்டம் (தற்போதைய வடிவில் அல்ல)
வர வேண்டும், அது, சுதந்திரமான ஊழல் கண்காணிப்பு ஆணையம், சுதந்திரமான
சி.பி.ஐ., ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க வழி வகுக்க
வேண்டும்' என்ற தனது எதிர்பார்ப்பை இந்த புத்தகத்தில் அப்துல் கலாம்
வெளிப்படுத்தி உள்ளார்.
இதே போன்று தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான தனது எதிர்பார்ப்பையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதி இருப்பதாவது:-
ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை நாட்டின் குறிப்பிட்ட
தொகுதியில் இருந்து தாக்கல் செய்கிறார் என்றால், முதலில், அவர் இந்திய
குடிமகன்தானா என்பதை ஆதார் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு அடையாள
அட்டை அல்லது பிற வகை அடையாள அட்டை மூலமாக தேர்தல் அதிகாரி சோதிக்க
வேண்டும், இப்படியே வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றி போலீஸ்
ஆவணங்களிலிருந்தும், சொத்துகள் குறித்து நில அதிகாரிகளிடமிருந்தும்,
கல்வித்தகுதி பற்றி பல்கலைக்கழக பதிவேடுகளிலிருந்தும், வருமானம் குறித்து
வருமான வரித்துறை ஆவணங்கள் மூலமும், கடன் நிலவரம் குறித்து வங்கி
ஆவணங்களிடமிருந்தும் கம்ப்யூட்டரை தட்டி விட்டு பரிசீலிக்க வேண்டும்.
அதன்பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தேர்தல்
அதிகாரியின் கம்ப்யூட்டர் திரையில் வர வேண்டும். அதைத் தொடர்ந்து அவரது
வேட்புமனு தகுதி குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்ய வேண்டும். அதைத்
தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட வேண்டும். தேர்தலின்போது,
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது தவிர்த்து, செல்போன்
வைத்திருக்கிற வாக்காளர்கள், அதன் மூலம் தங்களது தேசிய அடையாள அட்டையை
பயன்படுத்தி, தங்களது தொகுதியில், விரும்புகிற வாக்காளர்களுக்கு வாக்களிக்க
வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...