கலந்தாய்வின்போது, கணித பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
மறைக்கப்பட்டதை கண்டித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு
ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த மாதம்
நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், அரசின் உத்தரவும்;
மாறுதல் நெறிமுறைகளும் காற்றில் பறக்க விட்டதாகவும், 2011ம் ஆண்டிற்கு
பின்னர் காஞ்சி புரம் ஒன்றியத்தில் தமிழ், கணிதம், வரலாறு ஆகிய
பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும், கணித
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வில் காஞ்சிபுரம்
மற்றும் ஒன்பது ஒன்றியங்களில், காலிப்பணியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டு,
கலந்தாய்வுக்கு பின்னர் அந்த காலிப்பணியிடம் நிரப்பப்பட்டதாகவும் கூறி
நேற்று மாலை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் நடந்த இந்த
ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தொடக்க கல்வி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள்
எழுப்பப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...