தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்
ஆன்லைனில் பதியும் போது முழுமையான பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து,
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தாம்பரம் மண்டலத்தின் ஆணையர் மதியழகன்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கு
விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக கடந்த மாதம் 30ம் தேதி மத்திய தொழிலாளர்
மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சர் வருங்கால வைப்பு நிதிக்கான ஆன்லைன்
குறியீட்டு எண்களை வெளியிட்டார்.
இதுதொடர்பான விவரங்கள் www.epfindia.gov.in
என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் பல தொழில்
நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில நிறுவனங்களின் உரிமையாளர்கள்
தங்கள் பெயரை உரிமையாளர்கள் என்ற இடத்தில் குறிப்பிடும்போது பான்கார்டில்
உள்ளபடி எழுதியுள்ளனர். அப்படி குறிப்பிட்டுள்ள பெயர்கள் வருங்கால வைப்பு
நிதி கணக்கில் குறிப்பிட்டுள்ள பெயர்களோடு பொருந்தவில்லை என்பது
கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி
அமைப்பில் பதிவு செய்ய விரும்புவோர் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்
நிறுவனங்களின் உரிமையாளர்கள் அவர்களின் முழுமையான பெயரை (முதல் பெயர்,
இடைப் பெயர், இறுதிப் பெயர்) பதிவு செய்ய வேண்டும். பான் கார்டில்
குறிப்பிட்டுள்ள தனியாள் பெயரை குறிப்பிடக்கூடாது. இதுபோன்ற பிழைகளால்
பெயர்கள் பொருத்தம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்
பான்கார்டு நகலை மெயிலில் அனுப்ப வேண்டும். மேலும், இந்த பிரச்னையை தீர்க்க
வசதியாக olre@epfindia.gov.in என்ற மெயிலுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு
மண்டல ஆணையர் மதியழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...